நூல் விலை உயர்வு: கரூரில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் வேலைநிறுத்தம்!

நூல் விலை உயர்வு: கரூரில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் வேலைநிறுத்தம்!

நாட்டில் பருத்தி நூல் விலை உயர்ந்ததைக் கண்டித்து அவற்றின் விலையைக் குறைக்க வலியுறுத்தி கரூரில் ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இதுகுறித்து கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது;

கரூரில் 400 ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 400 உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள், 150 நூல் விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள், 50 டையிங் மற்றும் பிரிண்டிங் தொழிற்சாலைகள், 500-க்கும் மேற்பட்ட சிறு தையல் நிறுவனங்கள், 500-க்கும் மேற்பட்ட ஜவுளி தொழில் சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் சுமார் 2.5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் பருத்திநூல் விலையை மத்திய அரசு  பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இத்தொழிலில் ஈடுப்பட்டுள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. எனவே பருத்டி நூல் விலையைக் குறைக்கக் கோரி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.

-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த 1 நாள் வேலைநிறுத்தத்தால் சுமார் ரூ.100 கோடி ஜவுளி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com