தேசிய நாட்டுப்புறக் கலை விழா; தஞ்சையில் இன்று துவக்கம்!

தேசிய நாட்டுப்புறக் கலை விழா; தஞ்சையில் இன்று துவக்கம்!

தஞ்சாவூரில் தென்னக பண்பாட்டு மையத்தில் 450 கலைஞர்கள் பங்கேற்கும் தேசிய நாட்டுப்புறக் கலை விழா இன்று கோலாகலமாக தொடங்கியதுள்ளது.

மொத்தம் 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 30 குழுக்கள் பங்கேற்றுள்ளார்கள். முதல் நாளான இன்று கேரளாவின் சிங்காரி மேளம் நடனத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தமிழ்நாடு கலைஞர்கள் பங்கேற்ற கரகாட்டம், காவடி ஆட்டமும் நடைபெற்றது.

இதே போன்று ராஜஸ்தானின் ஜாக்கிரி நடனம், மராட்டியத்தின் லாவணி ஆட்டம், காஷ்மீரின் சுர்மா நடனம், மத்தியப்பிரதேசத்தின் பதாய், குஜராத்தின் டங்கி, பஞ்சாபின் பாங்காரா நடனங்களுடன் பார்வையாளர்களை கவர்ந்தது. ஒவ்வொரு நாளும் 11 குழுவினர் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக இக்கலைவிழா தமிழக அரசால் நடத்தப் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com