ODI மகளிர் கிரிக்கெட்; உலக சாதனை படைத்த இந்திய வீராங்கனை!

ODI மகளிர் கிரிக்கெட்; உலக சாதனை படைத்த இந்திய வீராங்கனை!

Published on

சர்வதேச மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீராங்கனை என்ற சாதனையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி படைத்தார்.

சர்வதேச மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாம்மியை எல்பிடபிள்யூ செய்து, இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி தனது 250-வது விக்கெட்டை கைப்பற்றினார்.

அந்த வகையில் இச்சாதனையைப் படைத்த முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனை படைத்தார். ஜூலன். இதுவரை அவர் 199   ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இப்போது நடந்து வரும் ODI மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஜூலன் கோஸ்வாமி இதுவரை 41 விக்கெட்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. சர்வதேச அளவில் மற்ற  வீராங்கனைகள் யாரும் ODI மகளிர் கிரிக்கெட்டில் இதுவரை 200 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com