‘ஸ’-வுக்கு மாற்று எழுத்து கண்டுபிடியுங்கள்; தமிழக அரசுக்கு பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை சவால்!

‘ஸ’-வுக்கு மாற்று எழுத்து கண்டுபிடியுங்கள்; தமிழக அரசுக்கு பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை சவால்!

தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு இத்தாலி வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டதை முன்னிட்டு மாநில பிஜேபி தலைவர் அண்ணாமலை 'எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே' என்று தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அத்துடன் தமிழ்த்தாயின் புதிய ஓவியத்தையும் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பதிவில் இதை விமரிசித்திருந்தார் அதில் அவர் பதிவிட்டதாவது:

தமிழணங்கை போற்றுகிறோம் என்ற போர்வையில் தமிழ் எழுத்துகளுடன் 'ஸ'வையும் இணைத்துப் படம் போடும்போதே உங்களின் எண்ணம் புரிந்து விட்டது. கூப்பிய கைகளுள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் 'தொழுத கையுள்ளம் படை ஒருங்கும்' என வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

-இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதிவிட்டார். இதற்கு பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டதாவது:

தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள "ஸ" என்ற எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்ததாக அறிகிறேன். "தமிழ் தமிழ்" என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரிலுள்ள முதல் எழுத்தைத்தான் நாங்கள் வைத்தோம். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது. "ஸ"வை நீக்கிவிட்டு  அதற்கு மாற்று எழுத்தை கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழுவை அமைக்க வேண்டும்.

மேலும் அதுவரை ''ஸ்டாலின்'' என்ற பெயரில் உள்ள முதல் எழுத்து எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் தெங்கம் தென்னரசு தெரிவிக்க  வேண்டும்.

-இவ்வாறு அண்ணாமலை தன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com