0,00 INR

No products in the cart.

கியான்வாபி மசூதி விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகேயுள்ள கியான்வாபி மசூதியில் இந்துக் கோயில் இருப்பதாகவும், அங்கு வழிபட அனுமதிக்கக் கோரி இந்து பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது

இந்த மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்றம், கியான்வாபி மசூதியில் வீடியோ ஆதாரத்துடன் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது. இந்நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 3 நாட்கள் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்து பெண்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிசங்கர் ஜெயின் நீதிமன்றத்தில் தகவல் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தை சீல் வைத்து மூட வாரணாசி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அதே சமயத்தில், அங்கு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பதாக வெளியான தகவல், உத்தரபிரதேசம் முழுவதும் காட்டுத் தீ போல பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உ.பி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தன்  ட்விட்டர் பதிவில், “எவ்வளவு முயற்சித்தாலும் உண்மையை நீண்டகாலத்துக்கு மறைக்க முடியாதுஎனக் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சித் தலைவர் அசாதுதின் ஒவைசி தன் டிவிட்டரில் ‘பாபர் மசூதியை அடுத்து மற்றொரு மசூதியை இழக்க நாங்கள் தயாராக இல்லைஎனக் கூறியிருக்கிறார். இந்த மசூதி சர்ச்சையால் .பி.யில் பதற்றமான சூழல் நிலவுகிற்து. 

இந்நிலையில், இந்த கள ஆய்வை நிறுத்தக் கோரி கியான்வாபி மசூதி சார்பில் இன்டாசாமியா என்ற குழு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் ஆலோசனை!

0
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று கழக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். நாளை அமாவாசை தினத்தை முன்னிட்டு, ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப் பட உள்ளதாக...

விருது நகருக்கு தேசிய விருது!

0
இந்த வருடத்துக்கான தேசிய MSME விருதுகள் பட்டியலில் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் முதல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. -இதுகுறித்து மத்திய அரசின் "நிடி ஆயோக்" அமைப்பு தெரிவித்ததாவது: விருது நகர் மாவட்டத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை...

11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன. -இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது: தமிழகத்தில்  11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் சற்று முன்பு...

200 கி.மீ வேகத்தில் பந்து வீச்சு?!  அதிர்ச்சியான அயர்லாந்து அணி!

0
கிரிக்கெட் உலகில் அதிரவைக்கும் சம்பவம் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் அரங்கேறியது. ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20 கிரிக்கெட் போட்டிகள் விளையாட அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நேற்று அந்நாட்டு...

ஜூலை 1 முதல் சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு!

0
சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியில் சுங்க கட்டணங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதையடுத்து கட்டண உயர்வு குறித்து வாகன ஓட்டிகளிடம்...