இலங்கை அதிபருக்கு எதிரான போராட்டம்: தமிழர்கள் பாடிய இந்திய தேசிய கீதம்!

இலங்கை அதிபருக்கு எதிரான போராட்டம்: தமிழர்கள் பாடிய இந்திய தேசிய கீதம்!

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார சீர்கேடு காரணமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு பெரும் பஞ்சம் நிலவுகிற்து. இதையடுத்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள்னர். குறிப்பாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை அதிபருக்கு எதிரான போராட்டத்தில் சிங்கள மக்களுடன் சேர்ந்து தமிழ் மக்களும் கைகோர்த்துள்ளதாக அந்நாட்டு நாளிதழான வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.

வீரகேசரி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்ததாவது:

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி பொதுமக்களால் சுயமாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்றுடன் 10-வது நாளாக தொடர்கிறது. ''கோட்டா கோ ஹோம்'' என்று தொடங்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் தற்போது 'கோட்டா கோ கம' என்று உருமாறி நாடு தழுவிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் சிங்கள மக்களுடன் தமிழ் மக்களும் கைகோர்த்துள்ளனர்.  நேற்று ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு இந்த போராட்டத்தின்போது சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது.

இதையடுத்து தமிழர்கள் ''ஜன கன மன'' என்று இந்திய தேசிய கீதத்தையும் பாடியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இலங்கை அதிபருக்கு எதிரான போராட்டத்தில் தமிழர்களும் சிங்களர்களும் ஒன்றாக இணைந்துள்ளது புலனாகிறது. இது இலங்கையில் நாட்டின்  நல்லிணக்கத்துக்கு ஒரு சிறந்த தொடக்கமாக அமையும் என்று பலராலும் வரவேற்கப்படுகிறது.

-இவ்வாறு அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com