சர்வதேச துருக்கி குத்துச்சண்டை போட்டி: வெள்ளி வென்ற நிவேதாவுக்கு உற்சாக வரவேற்பு!

சர்வதேச துருக்கி குத்துச்சண்டை போட்டி: வெள்ளி வென்ற நிவேதாவுக்கு உற்சாக வரவேற்பு!

துருக்கியில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை நிவேதா இன்று சென்னை திரும்பியபோது உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

துருக்கியில் இஸ்தான்புல்லில் வாகோ 7-வது சர்வதேச துருக்கி ஓபன் குத்துசண்டை உலகக் கோப்பை' நடைபெற்று வருகிறது. இதில் 44 நாடுகளை சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். அதில் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த 14 வயது நிவேதா கலந்துகொண்டு வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

இதையடுத்து துருக்கியில் இருந்து இன்று சென்னை திரும்பிய நிவேதா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

வெளிநாட்டு வீரர்களுடன் குத்து சண்டை போடுவது மிகவும் கடினமாகத்தான் இருந்தது. அடுத்துமுறை நிச்சயம் தங்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.  எனக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்களுக்கும் என் பெற்றோருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசு என் பயிற்சிக்கு இன்னும் ஊக்கம் அளித்தால் நிச்சயம் கடுமையான பயிற்சி பெற்று தங்க பதக்கம் வெல்வேன்.

-இவ்வாறு நிவேதா தெரிவித்தார்.  இதையடுத்து அவரது பயிற்சியாளர் சுரேஷ் பாபு கூறியதாவது:

சர்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண்ணாக நிவேதா பதக்கம் வென்றுள்ளார். இது தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கக் கூடிய ஒன்று. தமிழகத்தில் தொடர்ச்சியாக குத்துச்சண்டை வீராங்கனைகள் உருவாகி வருகின்றனர்.

இனிவரும் காலங்களில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டிகளில் தொடர்ந்து இவர்கள் பங்கேற்பார்கள். தமிழக அரசும் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறது. அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

-இவ்வாறு அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com