தமிழகத்தில் மேலும் 5 இடங்களில் அகழாய்வு; தொல்லியல் ஆய்வுத்துறை அதிகாரி அறிவிப்பு!

தமிழகத்தில் மேலும் 5 இடங்களில் அகழாய்வு; தொல்லியல் ஆய்வுத்துறை அதிகாரி அறிவிப்பு!

தமிழகத்தில்  வெம்பக்கோட்டை, வைகை ஆற்றங்கரை உட்பட மேலும்  ஐந்து இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக, தென்னிந்திய கோயில் ஆய்வுத் துறையின் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

நேற்று உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறை, கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகம் மற்றும் நாகர்கோயில் ஸ்காட் கிறித்துவ கல்லூரியின் வரலாற்று ஆய்வுத் துறை ஆகியவை இணைந்து பாரம்பரியத்தை பாதுகாப்பதில் அகழாய்வின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தியது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா, பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;

தமிழகத்தில் வெம்பக்கோட்டை, வைகை ஆற்றங்கரை உட்பட ஐந்து இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதன் மூலம் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் வெளிக்கொண்டு வரப்படும்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com