கரும்புக்கு கொள்முதல் விலை: தமிழக விவசாயிகள் சத்தீஸ்கர் முதல்வருடன் சந்திப்பு!

கரும்புக்கு கொள்முதல் விலை: தமிழக விவசாயிகள் சத்தீஸ்கர் முதல்வருடன் சந்திப்பு!

சத்தீஸ்கரில் கரும்புக்கு அதிகபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகலை சந்திப்பதற்காக, தமிழக விவசாயிகள் இன்று சென்னையில் இருந்து சத்தீஸ்கர் புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு காவேரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் கூறியதாவது:

நாட்டிலேயே சத்தீஸ்கர் மாநிலத்தில் தான், கரும்புக்கு டன் ஒன்றுக்கு 3,550 ரூபாய்; நெல் குவிண்டாலுக்கு 2,540 ரூபாய் என்று அதிகபட்ச கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தற்போது, தமிழகத்தில் கரும்புக்கான பரிந்துரை விலையுடன், கரும்பு டன் ஒன்றுக்கு 2,950 ரூபாயை மாநில அரசு வழங்கி வருகிறது. இது, சத்தீஸ்கருடன் ஒப்பிடும் போது, டன் ஒன்றுக்கு 600 ரூபாய் குறைவு. தமிழகத்தில் கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குமாறு, பல முறை மாநில அரசிடம் வலியுறுத்தியும் பலன் இல்லை. அதனால் .கரும்புக்கு அதிகபட்ச கொள்முதல் விலையை நிர்ணயித்த, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலை இன்று மாலை சந்தித்து, பாராட்டு தெரிவிக்க உள்ளோம். அம்மாநில முதல்வர் எங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தந்துள்ளார். மேலும் நாளை அங்கு அம்மாநில நெல், கரும்பு விவசாயிகளுடன் ஆலோசிக்க உள்ளோம்.

-இவ்வாறு அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com