0,00 INR

No products in the cart.

தேசிய ஜூனியர் நீச்சல் போட்டி; நடிகர் மாதவன் மகன் சாதனை! 

தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில், 1500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் புது சாதனைப் படைத்திருக்கிறார் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த். 

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கலிங்கா அரங்கத்தில் நடைபெறும் 48-வது ஜீனியர் நேஷனர் சாம்பியன்ஷிப் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் பங்கேற்றார். இப்போட்டியில் வேதாந்த் புதிய சாதனை படைத்து  தங்கம் வென்றுள்ளார். அவர் இந்த போட்டியில் 1500 மீ தூரத்தை ப்ரீஸ்டைல் பிரிவில் 16:01.73 விநாடிகளில் கடந்து வேதாந்த் தங்கம் வென்றார்.

நடிகர் மாதவன் கடந்த ஜூலை 1-ம் தேதி தனது இயக்கத்தில் உருவான ‘ராக்கெட்ரி’ படத்தை வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்றார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணனாக மாதவன் அசத்தலாக நடித்திருந்தார். இந்த படம் உலகளவில் பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில், நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்து வருகிறார்

-இதுகுறித்து மாதவன் தன் டிவிட்டர்  பதிவில் குறிப்பிட்டதாவது:

எனது மகன் வேதாந்த், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 1,500 மீட்டர் பிரீ ஸ்டைல் பிரிவு  போட்டியில் பங்கேற்று வேதாந்த் புதிய சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 16 நிமிடங்களில் 780 மீட்டர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் பிரிவில் சாதனை படைத்த அத்வைத்தின் சாதனையை வேதாந்த் முறியடித்துள்ளார்.

-இவ்வாறு நடிகர் மாதவன் குறிப்பிட்டுள்ளார். 

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவர் இன்று பதவியேற்பு!

0
நாட்டின் 14-வது புதிய குடியரசுத் துணைத்  தலைவராக ஜெகதீப் தங்கர் இன்று பொறுப்பேற்கிறார். - இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது: நாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த வெங்கைய நாயுடுவின்...

காஷ்மீரில் தீவிரவாதம் : 3 ராணுவ வீரர்கள் பலி! 

0
காஷ்மீரில் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 3 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. - இது குறித்து இந்திய ராணுவம் சார்பில் தெரிவித்ததாவது: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்திலிருந்து 25 கிமீ.,தொலைவில்...

ரஜினிக்கு பிரதமர் மோடி அழைப்பு!

0
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 6-ம்  தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து விட்டு வந்த நிலையில், அவர் மீண்டும் டெல்லி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. - இது குறித்து பிரதமர் அலுவலக...

இன்று ரக்ஷா பந்தன்: நாடெங்கும் கொண்டாட்டம்!

0
ஒவ்வொரு ஆவணி மாதம் பெளர்ணமி தினத்தில் கொண்டாடப்படும் பண்டிகை தான் ரக்ஷா பந்தன். அந்த வகையில் இன்று நாடெங்கும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் சகோதரிகள் தான் சகோதரன் என கருதுவோருக்கு, அவரின்...

போதைப் பொருள் எதிர்ப்பு : பள்ளிகளில் இன்று உறுதிமொழி!  

0
போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளான இன்று (ஆகஸ்ட் 11) தமிழகத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளில் இதுதொடர்பான உறுதிமொழியை இன்று காலை 10.30 மணிக்கு எடுக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. -இது குறித்து தமிழக...