10-ம் வகுப்பு தனித் தேர்வர்கள்: ஹால் டிக்கெட் – வெளியீடு!

10-ம் வகுப்பு தனித் தேர்வர்கள்: ஹால் டிக்கெட் – வெளியீடு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் கடந்த மார்ச் 9-ம் தேதி முதல் மார்ச் 16-ம் தேதி வரை தேர்வுத்துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் முன்னதாக அறிவித்தது.

இந்நிலையில் இந்த விண்ணப்பதாரர்களுக்கான ஹால் டிக்கெட் குறித்து தெரிவித்ததாவது;

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று (ஏப்ரல் 20) வெளியிடப்படும் என்று ஏற்கனவே தேர்வுத்துறை அறிவித்தது.

அதன்படி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல்  https://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

-இவ்வாறு தமிழக அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

மேலும்,வருகிற ஏப்ரல் 27 முதல் ஏப்ரல் 29 வரை நடைபெற உள்ள அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கு, ஹால் டிக்கெட் கட்டாயம் தேவை எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com