சர்வதேச ஓபன் செஸ் போட்டி: தமிழகத்தின் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்!

சர்வதேச ஓபன் செஸ் போட்டி: தமிழகத்தின் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்!

ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் (வயது 15) சாம்பியன் பட்டம் வென்றார்.

ஸ்பெயினில் நடைபெற்ற 48-வது லா ரோடா சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில், சென்னையைச் சேர்ந்த குகேஷ் 8 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தார்.மொத்தம் 13 நாடுகளிலிருந்து வந்த 183 வீரர்கள் பங்கேற்ற இந்த செஸ் போட்டியில், ஆரம்பம் முதலே  குகேஷ் முன்னிலை வகித்தார்.

மொத்தம் 9 சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், குகேஷ் ஒன்றிலும் தோல்வியடைவில்லை. அந்த வகையில் குகேஷ் 7 வெற்றி, இரண்டு டிரா என்ற கணக்கில் மொத்தம் 8 புள்ளிகளுடன்  முதலிடம் பிடித்தார். இந்த போட்டியில் கலந்து கொண்ட மற்றொரு தமிழக வீரரான பிரக்ஞானந்தா, 7 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் டிவிட்டரில் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது;

ஸ்பெயினில் கலந்து கொண்ட மிகவும் சவாலான போட்டியாளர்களுக்கு மத்தியில் தோல்வியுறாமல் விளையாடி சாம்பியன் பட்டத்தை குகேஷூக்கு சிற்ப்புப் பாராட்டுக்கள். மேலும் 3-ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள்.

-இவ்வாறு தன் டிவிட்டரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com