சர்வதேச மகளிர் குத்துச்சண்டைப் போட்டி; தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!

சர்வதேச மகளிர் குத்துச்சண்டைப் போட்டி; தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்த சர்வதேச மகளிர் உலகக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நிகாத் ஜரீன் தங்கம் வென்றார். இதன்மூலம், இந்த சாம்பியன் பட்டத்தை வென்ற 5-வது இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று (மே 19) நடந்த இறுதிச் சுற்றில் தாய்லாந்து வீராங்கனை ஜிட்பாங் ஜுடாமஸை இந்தியாவின் நிகாத் ஜரீன் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

இந்தப் போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் நிகாத் ஜரீன் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதற்குமுன் சர்வதேச குத்துச் சண்டைப் போட்டிகளில்  மேரி கோம், சரிதா தேவி, ஜென்னி, லேகா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். 

 நிகாத் ஜரீன் சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:

நமது குத்துச்சண்டை வீராங்கனைகள் நம்மை பெருமை கொள்ள செய்துவிட்டனர். அற்புதமான வெற்றியைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்ற நிகாத் ஜரீனுக்கு வாழ்த்துகள். வெண்கலம் வென்ற மணிஷா மெளன், பர்வீன் ஹூடா ஆகியோருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

-இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com