IPL கிரிக்கெட் இறுதிப் போட்டி; நேரத்தை மாற்றி  அமைத்தது பிசிசிஐ!

IPL கிரிக்கெட் இறுதிப் போட்டி; நேரத்தை மாற்றி  அமைத்தது பிசிசிஐ!

ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வரும் இச்சமயத்தில், இதன் இறுதிப் போட்டிக்கான நேரத்தை பிசிசிஐ மாற்றி அறிவித்துள்ளது.  பிசிசிஐ இறுதிப் போட்டியன்று பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதால் இவ்வாறு  நேரம் மாற்றப்பட்டதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தெரிவித்ததாவது:

கடந்த மார்த் மாதம் 26-ம் தேதி துவங்கிய 15-வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 67 சூப்பர் லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் 3 போட்டிகளே எஞ்சியுள்ளன. ஐபிஎல் போட்டியில் இந்த வருடம் புதிதாக அறுமுகமான குஜராத் மற்றும் லக்னோ அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுவிட்டன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான 2 அணிகள் தேர்வானதும் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும். 

அதனைத் தொடர்ந்து இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த இறுதிப்போட்டி துவங்கும் நேரம் மாற்றி அமைக்கப் பட்டுள்ள்து. யுள்ளது. அதாவது வழக்கமாக இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டி 8 மணிக்கு மாற்றப் பட்டுள்ளது. 

இறுதிப் போட்டிக்கு முன்னதாக சுமார் 6.30 மணியளவில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், இசையமைப்பாள .ஆர். ரஹ்மான் போன்ற பிரபலங்கள் கலந்து கொள்ளும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் 75-வது சுதந்திரத் தினத்தை கொண்டாடும் வகையிலும், இந்திய கிரிக்கெட் பயணத்தை குறிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது. சுமார் 45 நிமிடங்கள் நடக்கும் இந்த கலை நிகழ்ச்சிக்குப் பின் இரவு  7.30 மணிக்கும் டாஸ் போடப்பட்டு, அதன்பிறகு அரை மணிநேரத்திற்குப் பிறகு 8 மணிக்கு இறுதிப் போட்டி துவங்கும். 

-இவ்வாறு பிசிசிஐ தெரிவித்துள்ளது.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com