ஊட்டி மலர் கண்காட்சி; முதல்வர் ஸ்டாலின் இன்று தொடக்கம்!

ஊட்டி மலர் கண்காட்சி; முதல்வர் ஸ்டாலின் இன்று தொடக்கம்!

நீலகிரி  மாவட்டம் ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்காவின் 124-வது மலர் கண்காட்சியை, தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்ததாவது:

நீலகிரியில் வருடந்தோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக பிரசித்தி பெற்ற ஊட்டி மலர்க் கண்காட்சி நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்கள் மலர் கண்காட்சி நடத்தப் படவில்லை. இந்நிலையில்.

உதகையில் 124வது மலர்க் கண்காட்சியை இன்று முதல்வர் மு..ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  இந்த முறை சுற்றுலாப் பயணிகளை கவர இந்த மலர்க் கண்காட்சியில் ஜெரேனியம், சைக்லமன் உட்பட275 ரகங்களில் 5.5 லட்சம் மலர் செடிகள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. மேலும் கண்ணாடி மாளிகையில் 35 ஆயிரம் வண்ண மலர்த் தொட்டிகளில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன

கண்காட்சியின் சிறப்பம்சமாக பல்லாயிரக்கணக்கான மலர்களால் கோவை வேளாண் பல்கலைக்கழகம், ஊட்டி 200,பல்வேறு கலைகளை பறைசாற்றும் கலைஞர்களின் வடிவங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும் வெளிநாட்டிலிருந்து

இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு மலர்களின் அணிவகுப்பு, மலர் அலங்காரங்கள், டூலிப்ஸ் மலர்கள் உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இடம்பெற்றுள்ளன. 

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. ஊட்டியில் இன்று 124-வது மலர் கண்காட்சி தொடங்கப் பட்டதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com