0,00 INR

No products in the cart.

டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானத்தில் கோளாறு: பாகிஸ்தானில் தரையிறக்கம்!

டெல்லியிலிருந்து இன்று காலையில் தோஹா நோக்கி புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதா, பாகிஸ்தானிலுள்ள கராச்சி நகரில் அவசரமாக தரை இறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கத்தார் ஏர்வேஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

டெல்லியிலிருந்து இன்று காலையில் 100 பயணிகளுடன் கத்தார் ஏர்வேஸ் விமானம் தோஹா நோக்கி புறப்பட்டது. அப்போது பாகிஸ்தான் மேலாகப் பறக்கும்போது விமானத்தின் சரக்குப் பகுதியிலிருந்து புகை கிளம்பியதால் விபத்தைத் தவிர்க்கும் வகையில் விமானம் அவசரமாக கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன. அதையடுத்து  பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.மாற்று விமானம் மூலம் அவர்கள் தோஹாவுக்கு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து விசாரணை நடத்தப்படும்.

-இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

 

 

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

ஊட்டி மலர் கண்காட்சி; முதல்வர் ஸ்டாலின் இன்று தொடக்கம்!

0
நீலகிரி  மாவட்டம் ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்காவின் 124-வது மலர் கண்காட்சியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.  இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்ததாவது: நீலகிரியில் வருடந்தோறும் மே மாதம் கோடை...

IPL கிரிக்கெட் இறுதிப் போட்டி; நேரத்தை மாற்றி  அமைத்தது பிசிசிஐ!

0
ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வரும் இச்சமயத்தில், இதன் இறுதிப் போட்டிக்கான நேரத்தை பிசிசிஐ மாற்றி அறிவித்துள்ளது.  பிசிசிஐ இறுதிப் போட்டியன்று பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதால் இவ்வாறு ...

ஆக்சிஜன் கருவி மூலம்தான் சுவாசிக்கிறேன்: சுவாமி நித்தியானந்தா!

0
சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை  குறித்து பல்வேறு செய்திகள் பரவி வரும் நிலையில், அவர் மூச்சுத் திணறலால் அவதிப்படுவதாக தன் முகநூலில் குறிப்பிட்டு புதிய தகவலை வெளியிட்டுள்ளார். சுவாமி நித்தியானந்தா இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் சிக்கி,...

சர்வதேச மகளிர் குத்துச்சண்டைப் போட்டி; தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!

0
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்த சர்வதேச மகளிர் உலகக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நிகாத் ஜரீன் தங்கம் வென்றார். இதன்மூலம், இந்த சாம்பியன் பட்டத்தை வென்ற 5-வது இந்திய...

தமிழகத்தின் அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின்:  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!

0
தமிழகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலின் முதல்வர் ஆவதற்குத் தயாராக இருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொன்டு...