ஆளுனர் உயிருக்கு ஆபத்து; குடியரசுத் தலைவருக்கு அதிமுக புகார் மனு!

ஆளுனர் உயிருக்கு ஆபத்து; குடியரசுத் தலைவருக்கு அதிமுக புகார் மனு!

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியின் உயிருக்கு ஆளுங்கட்சியால் அச்சுறுத்தல் இருப்பதாகவும், இது குறித்து திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அதிமுக சார்பில் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமருக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் (ஏப்ரல் 19) சிதம்பரத்தில் தருமபுரம் ஆதினத்தில் ஞானரத்தை திறந்து வைக்கச் சென்றார். அப்போது மயிலாடுதுறையில் ஆளுனரின் காரை வழிமறித்த போராட்டக்காரர்கள், கறுப்புக் கொடி காட்டி, அவரது  கார் மீது கற்கல் வீசப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

அதேபோல் இந்த கான்வாயில் ஆளுனருடன் வந்த இரண்டு வாகனங்கள் மீது கறுப்புகொடி வீசப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், ஆளுனர் கார் மீது கல்வீச்சு சம்பவம் நடக்கவில்லை என்று தமிழக  காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ஆளுனரிடம் முதல்வர் ஸ்டாலின் இது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இது குறித்து உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத போவதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆளுனர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அதிமுக சார்பில், குடியரசு தலைவர், பிரதமர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட பலருக்கும் அதிமுக சட்டக்குழு உறுப்பினர் பாபு முருகவேல் சார்பில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் குறிப்பிடப் பட்டதாவது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் சுதந்திரமாக செயல்படவில்லை. மேலும் தமிழகத்தில் போதை பொருள் பழக்கம் அதிகரித்து,  பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையை திறம்பட கையாளாத திமுக அரசு தமிழகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை. இதனை கருத்தில் கொண்டு அரசியமைப்பு சாசன சட்டத்தின்படி திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  அதிமுக சார்பில் குடியரசுத் தலைவருக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ள இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com