26-ம் தேதி ஐபிஎல் தொடர் ஆரம்பம்: சிஎஸ்கே அணியின் ப்ளேயிங் 11 பட்டியல்!

26-ம் தேதி ஐபிஎல் தொடர் ஆரம்பம்: சிஎஸ்கே அணியின் ப்ளேயிங் 11 பட்டியல்!

இந்த வருட  ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 26-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது  அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.இநத அணியின் பிளேயிங் 11 வீரர்கள் பட்டியலில் யாரெல்லாம் இடம்பெற்றுள்ளனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும்  கேப்டன் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்கலாம் என்று கருதப்படுவதால், சிஎஸ்கே கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் உத்தேச 11 வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த அணியில் கேப்டன் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், டிவோன் கான்வே, ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ராஜ்வர்தன் ஹர்கர்கேகர், முகமது ஆஷிப், ஆடம் மில்னே ஆகியோர் ப்ளேயிங் 11 -ல் உள்ளனர்.

அணியின் துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டிவோன் கான்வே இருப்பார்கள் என்பது உறுதியானதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்தடுத்த வரிசைகளில் ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி ஆகியோர் களமிறங்க உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் முதல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சிஎஸ்கே அணி எதிர்கொண்டு விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக  தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com