0,00 INR

No products in the cart.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் காந்தி நினைவிடத்தில் மரியாதை!

இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்று வந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இன்று டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்ததாவது;

இங்கிலாந்திலிருந்து 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்த பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், முதல் நாள் பயணமாக நேற்று குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அங்கு சபர்மதி காந்தி ஆசிரமம் சென்று பார்வையிட்டார். அங்கு ராட்டையில் நூல் நூற்று மகிழ்ச்சியடைந்தார். பின்னர் அகமதாபாத்திலுள்ள அதானி குழும அலுவலகத்தில், தொழிலதிபர் கவுதம் அதானியை, போரிஸ் ஜான்சன் சந்தித்துப் பேசினார்.

அப்போது, சுற்றுச்சூழல், பசுமை எரிசக்தி, விமான தயாரிப்பு, ராணுவ ஆயுத தயாரிப்பு உள்ளிட்டவற்றில், அதானி குழுமம், பிரிட்டன் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது போன்ற பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதையடுத்து இன்று காலையில் முதல் நிகழ்ச்சியாக டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று பிரிட்டன் பிரதமர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் காந்தியை பாராட்டி எழுதினார்.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

IPL கிரிக்கெட் போட்டி; கடைசி இடம் பிடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி! 

0
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் முதன்முறையானிந்த 15-வது சீசன் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்தை பிடித்துள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாவது: ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் போட்டி அதன் இறுதிக்கட்டத்தை...

ஷூட்டிங்கில் விபத்து: ஆற்றில் விழுந்த காரில் சமந்தா!

0
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை  சமந்தா நடிக்கும் ‘குஷி’ தெலுங்குப் படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றை காஷ்மீரில் நேற்று முந்தினம் படமாக்கினர். அப்போது அவர்கள் சென்ற கார் எதிர்பாராத விதமாக ஆற்றில்...

குவாட் உச்சிமாநாடு: ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமருக்கு வரவேற்பு!

0
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்ற ஆன்டனி ஆல்பனேசி இன்று ஜப்பானில் நடைபெறும் குவாட் மாநாட்டில் பங்கேற்க வந்தபோது, அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஆஸ்திரேலியாவின்...

ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி; குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பு!

0
குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று ஜப்பான் புற்ப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில்,...

டூ-வீலரில் பின் சீட் பயணிக்கும் ஹெல்மெட் கட்டாயம்; இன்று முதல் அமல்!

0
சென்னையில் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது: சென்னையில் இன்றுமுதல் டூவீலரில்...