
சென்னையில் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது:
சென்னையில் இன்றுமுதல் டூவீலரில் பின் சீட்டில் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இருசக்கர வாகன விபத்துகளில் ஹெல்மெட் அணியாததால் பலர் உயிரிழந்த்தாக அறியப்பட்டுள்ளது. இதையடுத்து டூவீலர் ஓட்டுனர் மட்டுமன்றி, பின்னிருக்கையில் பயனிப்போரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ள்து. இதைக் கண்காணிக்க சென்னை முழுவதும் சுமார் 200 சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். டூவீலர் பின்னிருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் ஹெல்மெட் அணியவில்லையெனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட உள்ளது.
-இவ்வாறு தமிழக அரசு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.