10 நிமிடத்தில் உணவு டெலிவரி; சோமேட்டோவிடம் போலீஸ் விசாரணை!

10 நிமிடத்தில் உணவு டெலிவரி; சோமேட்டோவிடம் போலீஸ் விசாரணை!

உணவுப் பொருட்களை டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனமான சோமேட்டோ, தங்களிடம் வாடிக்கையாளர்கள்  ஆர்டர் கொடுத்த அடுத்த 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யப்படும் என சமீபத்தில் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்திடம் சென்னை போலீஸார் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டதாவது:

சோமேட்டோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யும் வசதியை விரைவில் தொடங்கவிருப்பதாக அந்நிறுவனத் தலைவர் தீபிந்தர் கோயல் தன் டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தற்போது டெலிவரி நேரம் 30 நிமிடங்கள் என்பது தாமதமாக கருதப்படுவதால், உணவு ஆர்டர் செய்த அடுத்த பத்தே நிமிடத்தில் உணவை டெலிவரி செய்ய சோமேட்டோ இன்ஸ்டன்ட் என்ற முறையைக் கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை போக்குவரத்து நெரிசலில் வெறும் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி என்பது சிரமமான விஷயமாகும். ஆனால்,  ஏற்கனவே ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவன ஊழியர்கள் ரேட்டிங்கிற்றாக வேகமாக இருசக்கர வாகனங்களில் பயணித்து விபத்துகளை ஏற்படுத்துவதாக பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் 10 நிமிட உணவு டெலிவரி என்பது விபத்துக்கு வழிவகுக்கும். எனவே  இதுகுறித்து சோமேட்டோ நிறுவனத்திடம் போலீஸார் விளக்கம் கேட்க முடிவெடுத்துள்ளனர்.

-இவ்வாறு சென்னை மாநகர போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com