விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே சிறையில் திருமணம்!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே சிறையில் திருமணம்!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிஸை லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் நேற்று திருமணம் செய்துகொண்டார்.

ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அமெரிக்க ராணுவம் மற்றும் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு லண்டன் பெல்மார்ஷ் சிறையில் உள்ளார். அமெரிக்க ராணுவ ரகசியங்கள்  வெளியிட்டது தொடர்பாக அவர் மீது அமெரிக்காவில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் அசாஞ்சே, 2019- ம் ஆண்டுமுதல் லண்டன் பெல்மார்ஷ் சிறையில் இருந்து வருகிறார், அதற்கு முன்பு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகள் தஞ்சம் அடைந்திருந்தார்.

தற்போது 50 வயதான ஜூலியன் அசாஞ்சே, 10 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கு வழக்கறிஞராக உள்ள ஸ்டெல்லா மோரிசை காதலித்தார். ஈக்வடார் தூதரகத்தில் வசிக்கும் போது ஸ்டெல்லா மோரிஸுடன் இணைந்து வாழ்க்கை நடத்தி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானார் அசாஞ்சே.

இந்நிலையில் தன் நீண்ட கால காதலியான ஸ்டெல்லா மோரிஸை நேற்று பெல்மார்ஷ் சிறையில் ஜூலியன் அசாஞ்சே திருமண்ம் செய்துகொண்டார். சிறைக்குள் சிம்பிளாக நடந்த இந்த திருமணத்தில் இரண்டு சாட்சிகள் மற்றும் இரண்டு காவலர்கள் என நான்கு விருந்தினர்கள் பங்கேற்றனர். சிறையில் பார்வையாளர்கள் நேரத்தில் இத்திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் ஸ்டெல்லா மோரிஸ் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ ஒன்றை விக்கிலீக்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com