0,00 INR

No products in the cart.

மங்களூருவில் ஊரடங்கு உத்தரவு;  ஜூம்மா மசூதி அருகே நடமாட தடை!

கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள மலாலியில் பழமையான‌ ஜும்மா மசூதி உள்ளது. இங்கு, சமீபத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டபோது இந்து கோவில் போன்ற கட்டிடத்தின் வடிவமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கோயிலை மீட்க வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் அந்த மசூதிக்கு அருகில் உள்ள ராமாஞ்சநேயா பஜனை மந்திராவில் நேற்று முன்தினம் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ‘தாம்பூல பூஜை’ நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் இந்து, முஸ்லிம் தரப்பினரிடையே பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து ஜூம்மா மசூதியைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மக்கள் நடமாட இன்று இரவு 12 மணி வரை தடைவிதித்து 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் மங்களூரு மாநகர காவல் ஆணையர் சசிகுமார். மேலும்அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட மசூதி  நிலம் தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்த பிறகே இதுகுறித்து முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் தக்ஷின கன்னட மாவட்ட ஆட்சியர் கே.வி.ராஜேந்திரா.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் ஆலோசனை!

0
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று கழக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். நாளை அமாவாசை தினத்தை முன்னிட்டு, ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப் பட உள்ளதாக...

விருது நகருக்கு தேசிய விருது!

0
இந்த வருடத்துக்கான தேசிய MSME விருதுகள் பட்டியலில் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் முதல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. -இதுகுறித்து மத்திய அரசின் "நிடி ஆயோக்" அமைப்பு தெரிவித்ததாவது: விருது நகர் மாவட்டத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை...

11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன. -இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது: தமிழகத்தில்  11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் சற்று முன்பு...

200 கி.மீ வேகத்தில் பந்து வீச்சு?!  அதிர்ச்சியான அயர்லாந்து அணி!

0
கிரிக்கெட் உலகில் அதிரவைக்கும் சம்பவம் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் அரங்கேறியது. ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20 கிரிக்கெட் போட்டிகள் விளையாட அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நேற்று அந்நாட்டு...

ஜூலை 1 முதல் சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு!

0
சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியில் சுங்க கட்டணங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதையடுத்து கட்டண உயர்வு குறித்து வாகன ஓட்டிகளிடம்...