சர்வதேச புக்கர் விருது: இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஶ்ரீக்கு பரிசு!

சர்வதேச புக்கர் விருது: இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஶ்ரீக்கு பரிசு!

உலகளவில் சிறந்த இலக்கியத்துக்காக ஆண்டுதோறும் சர்வதேச  புக்கர்ஸ் அவார்டு வழங்கப்படுகிற்து. இந்நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான புக்கர் விருது இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய 'டாம்ப் ஆஃப் சாண்ட்'  என்ற இந்தி நாவல் புத்தகத்துக்கு கிடைத்துள்ளது. இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் ராக்வெல் என்பவர் மொழி பெயர்த்துள்ளார்.

கடந்த 1947-ல் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது தனக்கு ஏறபட்ட மோசமான அனுபவங்களை 80 வயது மூதாட்டி ஒருவர் உணர்ச்சிகரமாகப் பகிர்ந்து கொள்வதுதான் இந்த நாவலின் சாராம்சம்.

இந்த ஆன்டுக்கான புக்கர் விருதுக்கான இறுதிச் சுற்றில் போலந்து நோபல் அறிஞர் ஓல்கா டோக்கர்ஜுக், அர்ஜென்டினாவின் க்ளாடியா ஃபினேரியோ, கொரியாவின் போரா சுங் ஆகியோரின் புத்தகங்கள் பரிந்துரைக்கப் பட்ட நிலையில், இந்தி மொழியில் எழுதப்பட்ட கீதாஞ்சலி ஸ்ரீயின் புத்தகத்துக்கு இந்த விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com