0,00 INR

No products in the cart.

5 ஜி ஏலம்: நேற்று ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் கோடிக்கு கேட்பு!

இந்தியாவில் 5 ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நேற்று துவங்கிய நிலையில், முதல் நாளிலேயே 1.45 கோடி ரூபாய்க்கு தொகைக்கு ஏலம் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் இன்று 5- வது சுற்று ஏலம் நடத்தப்படவுள்ளது. இந்த 5 ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, அதானி குழுமம் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்ததாவது:

இந்தியாவில் 5 ஜி சேவை வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான ஏலம் நேற்று (ஜூலை 26) ஆன்லைனில் தொடங்கியுள்ளது. இதில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய 4 நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றுள்ளன.

இதில் 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பிரிவுகளாக 72 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைக்கான ஏலம் நடைபெறுகிறது. ஏலம் பெறும் நிறுவனம், 20 ஆண்டுகளுக்கு சேவை அளிக்கும் உரிமயைப் பெறும்.

இதில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 14 ஆயிரம் கோடி ரூபாயை வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளது. ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில், டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட 13 நகரங்களில், 5 ஜி சேவை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

5 ஜி வயர்லெஸ் பிராட்பேண்ட் இணைப்புகள் மூலம் தகவல்கள் அதிவேகத்தில் சென்றடையும். இதனால், தாமதம் தவிர்க்கப்பட்டு பயனர்களின் நேரம் மிச்சமாகும். 4 ஜி அலைக்கற்றையை விட 5ஜி  அலைக்கற்றையின் வேகம் 10 மடங்கு அதிகம்.

5 ஜி சேவையால் ஒரு வினாடிக்கு 2 ஜிபி தரவுகளை பதிவிறக்கம் செய்ய முடியும். ஒரே நேரத்தில் தரவுகளை பதிவேற்றவும், பதிவிறக்கம் செய்யவும் முடியும்.மேலும் 5 ஜி சேவையில் பலவீனமான சமிக்ஞை, நெட்வொர்க் குறைபாடு போன்ற பிரச்னைகள் இருக்காது

இந்நிலையில், 5 ஜி அலைக்கற்றைக்கான் முதல் நாள் ஏலத்தில் 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. இன்றுடன் ஏலம் நிறைவடையும் நிலையில், ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதிக்குள் அலைக்கற்றை ஒதுக்கீடு நிறைவடையும். நாட்டில் அக்டோபர் மாதத்திலிருந்து 5 ஜி அலைக்கற்றை சேவைகள் தொடங்கும்.

– இவ்வாறு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

இன்று 75-வது சுதந்திர தினம்:  நாடெங்கும் கோலாகலம்!

0
நாட்டின் 75வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, வீடுகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்திய தேசியக் கொடியை முதலில்  வடிவமைத்தவர் ஆந்திராவைச் சேர்ந்த...

தமிழகத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம்; இஸ்ரோ தலைவர் ஆய்வு! 

0
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில்,...

தங்கம் விலை அதிரடி உயர்வு: 1 சவரன் 40 ஆயிரத்தை நெருங்கியது! 

0
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4890 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.  -இதுகுறித்து தங்க நகைக்கடை உரிமையாளர்கள்  சங்கத்தினர் தெரிவித்ததாவது;  தினமும் தங்கத்தின்...

சினிமாவில் 63-ம் ஆண்டு : கமல்ஹாசன் சாதனை!

0
சினிமா நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான உலக நாயகன் கமல்ஹாசன் தனது  திரைத்துறைப் பயணத்தில் இன்று  63-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - இதுகுறித்து கமல்ஹாசன் நற்பணி மன்றத்தினர் தெரிவித்ததாவது: உலக...

வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற சென்னை மாநகராட்சி கோரிக்கை!

0
நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையிலும், தேசப்பற்று உணர்வை போற்றும் வகையிலும் அனைத்து வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி வைக்க சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில்...