0,00 INR

No products in the cart.

ஆஸ்கர் விழாவில் பரபரப்பு: நகைச்சுவை நடிகரை அறைந்த ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்!

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடிகர் வில் ஸ்மித், நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் என்பவரை விழா மேடையிலேயே தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு கிடைக்கப் பெற்றது. இந்த விழாவுக்கு வருகை தந்த வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித் முடி உதிர்தல் தொடர்பான அலோபீசியா நோயால் தலையில் முடியின்றி காணப்பட்டார்.

இந்த நிலையில் இந்த விழாவின் போது, சிறந்த ஆவணப்படத்திற்கான விருதினை வழங்க பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் மேடைக்கு வந்தார். அப்போது வில் ஸ்மித்திடம் பேசிய அவர், ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் சிகை அலங்காரம் குறித்து விமர்சித்தார். 1997-ம் ஆண்டில் வெளியான ஜி.ஐ. ஜேன் திரைப்படத்தில் நடித்த நடிகை டெமி மூரின் சிகை அலங்காரத்துடன் ஒப்பிட்டு அவரை கேலியாக பேசினார்.


இதனால் கோபம் அடைந்த நடிகர் வில் ஸ்மித், மேடைக்கு சென்று கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.வில் ஸ்மித் தனது இருக்கைக்கு திரும்பிய பின்னரும் ராக் விமர்சித்ததை தொடர்ந்தார். இதனால் ஆத்திரத்தில் உச்சிக்கு சென்ற ஸ்மித், அங்கிருந்தபடியே ‘என் மனைவியின் பெயரை உன் வாயிலிருந்து விலக்கிவிடு’ என மோசமான வார்த்தைகளால் கிறிஸ் ராக்கை கடுமையாகத் திட்டினார். இதையடுத்து ஆஸ்கார் விருது விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வருடம் சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை “CODA” படம் வென்றது. இதே படத்தில் நடித்த Troy Kotsur சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இவர் கேட்கும் திறன் அற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வருடம் சிறந்த இயக்குனருக்கான விருது ஜேன் கேம்பியன் பெற்றார். இவருக்கு ‘The Power of the Dog’ என்ற படத்தை இயக்கியதற்காக இந்தமுறை ஆஸ்கார் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

ஊட்டி மலர் கண்காட்சி; முதல்வர் ஸ்டாலின் இன்று தொடக்கம்!

0
நீலகிரி  மாவட்டம் ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்காவின் 124-வது மலர் கண்காட்சியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.  இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்ததாவது: நீலகிரியில் வருடந்தோறும் மே மாதம் கோடை...

IPL கிரிக்கெட் இறுதிப் போட்டி; நேரத்தை மாற்றி  அமைத்தது பிசிசிஐ!

0
ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வரும் இச்சமயத்தில், இதன் இறுதிப் போட்டிக்கான நேரத்தை பிசிசிஐ மாற்றி அறிவித்துள்ளது.  பிசிசிஐ இறுதிப் போட்டியன்று பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதால் இவ்வாறு ...

ஆக்சிஜன் கருவி மூலம்தான் சுவாசிக்கிறேன்: சுவாமி நித்தியானந்தா!

0
சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை  குறித்து பல்வேறு செய்திகள் பரவி வரும் நிலையில், அவர் மூச்சுத் திணறலால் அவதிப்படுவதாக தன் முகநூலில் குறிப்பிட்டு புதிய தகவலை வெளியிட்டுள்ளார். சுவாமி நித்தியானந்தா இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் சிக்கி,...

சர்வதேச மகளிர் குத்துச்சண்டைப் போட்டி; தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!

0
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்த சர்வதேச மகளிர் உலகக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நிகாத் ஜரீன் தங்கம் வென்றார். இதன்மூலம், இந்த சாம்பியன் பட்டத்தை வென்ற 5-வது இந்திய...

தமிழகத்தின் அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின்:  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!

0
தமிழகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலின் முதல்வர் ஆவதற்குத் தயாராக இருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொன்டு...