ஜனாதிபதி பதவி எனக்கு வேண்டாம்; பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி!

ஜனாதிபதி பதவி எனக்கு வேண்டாம்; பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி!

ஜனாதிபதி பதவிக்கான வாய்ப்பை ஒருபோதும் ஏற்க மாட்டேன் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வருகிற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அந்தப் பதவிக்கான தேர்தல் நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இப்பதவிக்கு பல முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப் படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், படும்  பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் பெயரும் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில் மாயாவதி தெரிவித்ததாவது:

பாஜக அரசின் மூலமாக குடியரசுத் தலைவர் பதவையை நான் பெற விரும்பவில்லை. அப்படி அந்த பதவியைப் பெற்றால் எங்கள் கட்சியின் முடிவிற்கு அது காரணமாக அமைந்துவிடும்.

ஆகவே எங்கள் கட்சி மற்றும் இயக்கத்தின் நலன் கருதி, பாஜக தரும் எந்த ஒரு வாய்ப்பையும் நான் ஏற்கமாட்டேன்.

-இவ்வாறு மாயவதி தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் உத்திரப் பிரதேசத்தில் உள்ள 403 இடங்களில் ஒரே ஒரு இடத்தை மட்டுமே மாயாவதி தலைமை வகிக்கும் பகுஜன் சமாஜ் கட்சி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com