0,00 INR

No products in the cart.

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை! பாதுகாப்பு பணியில் 22 ஆயிரம் போலீசார்! 

சர்வதேச 44-வது செஸ்  போட்டியின்  தொடக்க விழா இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்  நடைபெற உள்ள நிலையில், இந்த விழாவை தொடங்கி வைப்பதற்காக  பிரதமர்  மோடி இன்று சென்னை வருகிறார்.

-இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:

சர்வதேச 44-வது செஸ் போட்டியின்  தொடக்க விழாவுக்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் 2.20 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து தனி விமானத்தில் கிளம்பி, மாலை 4.45 மணிக்கு சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு..ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று பிரதமரை வரவேற்கின்றனர்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக 5.45 மணிக்கு ஐஎன்எஸ் அடையாறு ராணுவ தளத்துக்குச் சென்று அங்கிருந்து கார் மூலம் 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு பிரதமர் செல்கிறார். அங்கு விழா முடிவில் இரவு 8 மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் செல்கிறார்

பின்னர் நாளை காலை 9.50 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில்  42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு 69 பேருக்கு தங்கப் பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கி உரை நிகழ்த்துகிறார். பின்னர் நாளை காலை 12 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் அகமதாபாத்துக்கு செல்கிறார்.

 –இவ்வாறு பிரதமரின் நிகழ்ச்சி நிரல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை மாமல்லபுரத்தில்  இன்று முதல்ஆகஸ்ட் 10-ம் தேதி வரை 44-வது செஸ் போட்டி நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் 189 நாடுகளைச் சேர்ந்த, 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர்

இந்நிலையில், பிரதமர் மோடியின் வருகையையொட்டி பாதுகாப்புகள் ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.  விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. மேலும் சென்னை காவல் ஆணையர் தலைமையில், 4 கூடுதல் ஆணையர்கள், 7 இணை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் உட்பட சுமார் 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

#BREAKING: இபிஎஸ்-சின் பொதுச் செயலர் பதவி செல்லாது: ஐகோர்ட் அதிரடி!

0
அதிமுகவில் இபிஎஸ் பொதுச் செயலாரைாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது செல்லாது என்று சென்னை உயர் நீதி மன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.  அதிமுக-வில் இபிஎஸ் தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த...

ராமேஸ்வரத்தில் இந்தியக் கடற்படை பாதுகாப்பு ஒத்திகை! 

0
தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதிகளில் உச்சிபுளி ஐ.என்.எஸ் பருந்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் மற்றும் ரோந்துக் கப்பல்கள் மூலம் திடீர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.   -இதுகுறித்து இந்தியக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்ததாவது:  இலங்கையின் அம்பந்தோட்டா கடற்பகுதியில் இந்தியாவின்...

ஆவினில் பலாப்பழ ஐஸ்கிரீம்; 20-ம் தேதி முதல் விற்பனை! 

0
ஆவினில் விரைவில் புதிதாக 10 பால் உபபொருட்கள் அறிமுகப்படுத்த உள்ளதாகப் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அறிவித்தார்.  -இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:  ஆவின் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிதாக பலாப்பழ ஐஸ்கிரீம் உட்பட 10 புதிய பொருட்கள் வரும்...

குடியரசுத் துணைத் தலைவருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு! 

0
நாட்டின் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லியில் சந்தித்து அவர் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.   -இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது;  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: பயணிகள் படுகாயம்!

0
மகாராஷ்டிரா மாநிலம் கொண்டியா பகுதியில் பயணிகள் ரெயிலும், சரக்கு ரெயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 50 பேர் காயமடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாஸ்பூரிலிருந்து பயணிகள் ரயில் ராஜஸ்தானிலுள்ள ஜோதிப்பூர் நோக்கி சென்று...