தனுஷ் பட போஸ்டருக்கு ரசிகர்கள் கண்டனம்

தனுஷ் பட போஸ்டருக்கு ரசிகர்கள் கண்டனம்

நடிகர் தனுஷின் புதிய படமான 'நானே வருவேன்' படத்தில், தனுஷ் புகைபிடித்தபடி அமர்ந்துள்ள போஸ்டர் வெளியாகி, கடும் சர்ச்சையும் கண்டனமும் கிளப்பியுள்ளது.

நடிகர் தனுஷ் இப்போது 'தி கிரேமேன்' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து அவர் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். இதில் 'நானே வருவேன்' படத்தை தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்குகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே காதல் கொண்டேன், புதுப்பேட்டை படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. இதனால் 'நானே வருவேன்' படத்துக்கும் பெருத்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் 'நானே வருவேன்' படத்துக்கான போஸ்டரை இப்போது படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதில் தனுஷ் கால்மேல் கால்போட்டு சிகரெட் பிடித்தபடி ஸ்டைலாக அமர்ந்து இருக்கும் தோற்றம் உள்ளது. இந்த போஸ்டர் வலைத்தளத்தில் வைரலாகியது.

தனுஷ் தோற்றத்தை அவரது ரசிகர்கள் பாராட்டினாலும், அதிகளவில் கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளது. இந்த போஸ்டரின் மூலம் தனுஷ் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கிறார் என்று சர்ச்சை எழுந்துள்ளது.

''புகைப்பிடிப்பதன் மூலம்தான் உங்கள் கதாநாயகத் தோற்றத்தையும் மிடுக்கையும் வெளிப்படுத்த முடியுமா?" என்று வலைத்தளத்தில் பலர் விமர்சித்து வருகின்றனர். இதனால் இந்த போஸ்டர் விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com