மிக்-21 ராணுவ விமானம் விபத்து: 2 வீரர்கள் பலி!

மிக்-21 ராணுவ விமானம் விபத்து: 2 வீரர்கள் பலி!

Published on

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் நேற்றிரவு இந்திய விமானப் படையின் மிக்-21 ரக விமானம் வெடித்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் விமானத்தில் இருந்த 2  விமானப்படை வீரர்களும் உயிரிழந்தனர்.

-இதுகுறித்து பார்மர் மாவட்ட ஆட்சியர் லோக் பந்து கூறியதாவது;

நேற்றிரவு 9.10 மணியளவில்  மிக்-21 ரக போர் விமானம் பிம்தா என்ற கிராமத்தின் மேலே பறக்கும்போது விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறி விழுந்தது.

இத்தகவல் கிடைத்ததும் உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனே ராணுவத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 2 விமானிகளும் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

-இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்ததாவது:

இந்த விமான விபத்து சம்பவத்தில் உயிரிழந்த இரு வீரர்களின் குடும்பத்திற்கு ஆழந்த இரங்கல்களைத் தெரிவித்து கொள்கிறேன். அந்த 2 வீரர்களும் நாட்டிற்கு ஆற்றிய சேவை எப்போதும்  நிலைத்திருக்கும்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com