TNPSC குரூப்-4 அரசுப்பணித் தேர்வு: இன்று முதல் ஏப்ரல்-28 வரை விண்ணப்பிக்கலாம்!

TNPSC குரூப்-4 அரசுப்பணித் தேர்வு: இன்று முதல் ஏப்ரல்-28 வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என்றும் அதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் ஏப்ரல் 28-ம் தேதிவரை http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், 300 மதிப்பெண்களில் 90 பெற்றால் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் எனவும், தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் டி.என்.பி.எஸ்.சி (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) மூலம் தேர்வு செய்கிறது. இந்நிலையில், தமிழக அரசில் காலியாக உள்ள 7382 பணியிடங்களுக்கு தேர்வாக குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடை உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையத் தலைவர் பாக்சந்திரன் தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரை அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாலசந்திரன் தெரிவித்ததாவது:

டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 அரசுப் பணிகளுக்கான தேர்வு ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெறும். இத்தேர்வில்  300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும். அதில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களின் பெயர்கள் மட்டுமே தரவரிசை பட்டியலில் வெளியிடப்படும். மேலும் தற்போது உள்ள 7382 காலிப் பணியிடங்களில் 81 பணியிடங்கள் ஸ்போட்ஸ் கோட்டா மூலம் நிரப்பப்படும். இத்தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது.

-இவ்வாறு பாலசந்திரன் தெரிவித்தார்.

மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் மாணவர்கள் விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறையை கொண்டு வரப்பட்டுள்ளதாக இத்தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டதாவது:

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு இனி விண்ணப்பிக்கும் போதே சான்றிதழ்களை PDF வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்படி சான்றிதழ் பதிவேற்றத்தில் ஏதேனும் தவறுகள் நடந்தால் உடனடியாக OTR கணக்கு மூலமாக திருத்தம் செய்ய அவகாசம் அளிக்கப்படும். விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் சான்றிதழ்களின் அடிப்படையில் தேர்வுக்குப் பின் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

-இவ்வாறு  டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரிய செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com