0,00 INR

No products in the cart.

#BREAKING: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு செல்லாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு அளித்து தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது சரியே என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்  69 சதவீத இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்படும் 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் அவசரச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி 35 வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களில், ‘தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியது சட்டவிரோதம். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆதாயம் கருதி அவசரமாக் நிறைவேற்றப்பட்ட சட்டம் இது. ஆகவே இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ‘’சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ஒரு வகுப்புக்கு மட்டும் உள் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. எனவே, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டம் செல்லாது’’ என உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாமக தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று இந்த விவகாரத்தில் தீர்ப்பளித்து உத்தரவிட்டதாவது:

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு அளித்து மாநில அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை அம்மாநில உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது செல்லும். ஏனெனில் வன்னியர்களை மட்டும் தனிப் பிரிவாக கருதுவதற்கு முகாந்திரம் இல்லை. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்ய மாநில அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்றாலும், அதற்கான சரியான, காரணங்களை அரசாணையில் குறிப்பிட வேண்டும். இந்த வழக்கில் அப்படி குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. ஆகவே வன்னியர்களுக்கான 10.5 உள் இடஒதுக்கீடு செல்லுபடியாகாது.

-இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

ஆன்லைன் கேம்ஸுக்கான ஜிஎஸ்டி வரி; அதிகரிக்க மத்திய அரசு திட்டம்!

0
மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ, குதிரைப் பந்தயம் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி வரியை 18%ல் இருந்து 28% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர்கள் குழுவின்  பரிந்துரையில் தெரிவிக்கப்...

சிதம்பரம் கோயில் கனகசபை: பக்தர்கள் ஏறி வழிபட அரசு அனுமதி! 

0
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபடலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு முக்கிய பிரமுகர்கள் தவிர...

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்; அதிமுக வேட்பாளர்கள் இன்று தேர்வு!

0
நாடாளுமன்றத்தில் தமிழகம் சார்பாக காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்கு போட்டியிட அதிமுக-வுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய அக்கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை...

1 கிலோ தக்காளி ரூ.100: சென்னை கோயம்பேடு நிலவரம்!

0
தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயை தொட்டிருக்கிறது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்ததாவது; இம்மாதத் தொடக்கத்திலிருந்தே தக்காளி விலை...

பேரறிவாளன் விடுதலை; உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு!

0
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறைதண்டனை பெற்ற 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோர உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இன்று அந்த...