தமிழகத்தில் 24 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு; இன்று நள்ளிரவு முதல் அமல்!

தமிழகத்தில் 24 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு; இன்று நள்ளிரவு முதல் அமல்!

Published on

மத்திய நெடுஞ்சாலைத் துறை ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்க சாவடிகளில் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்ததையடுத்து, தமிழகத்தில் 24 சுங்க சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் அதிகரிக்கப் படுகிறது.

இதுகுறித்து மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவித்ததவது:

நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணங்கள் உயருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் ரூ. 5 முதல் ரூ. 240 வரை கட்டணம் அதிகரிக்கிறது.

சென்னை அருகே நல்லூர் சுங்கச்சாவடியில் 40% கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.ஒரு முறை கார் செல்ல கட்டணம் ரூ.50 என இருந்த நிலையில் நள்ளிரவு முதல் ரூ.70 ஆக உயர்த்தப்பட உள்ளது.

-இவ்வாறு மத்திய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடியில் ரூபாய் 10 முதல் ரூபாய் 40 வரை கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த சுங்க கட்டண உயர்வுக்கு மத்திய அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..

logo
Kalki Online
kalkionline.com