351 பக்க குற்றப் பத்திரிக்கை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது தாக்கல்!

351 பக்க குற்றப் பத்திரிக்கை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது தாக்கல்!
Published on

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட நடிகை சாந்தினி கடந்த ஜூன் மாதம் பாலியல் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து மணிகண்டன் மீது கொலைமிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நடிகை சாந்தினி அளித்துள்ள புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சைதாப்பேட்டையில் உள்ள பதினோராவது நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீஸ் 351 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கௌ விசாரணை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com