கனடா நாட்டில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கட்சி 3-ம் முறையாக வெற்றிபெற்று அந்நாட்டில் ஆட்சியமைக்கிறது. இதற்கான புதிய அமைச்சரவையில் அதிபர் ட்ரூடோ உட்பட 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
அனிதா ஆனந்த் தமிழகத்தில் வேலூரை பூர்வீகமாகக் கொணடவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனிதா ஆனந்த்தின் தந்தை சுந்தரம் விவேகானந்தன் ஒரு மருத்துவர் ஆவார். அனிதாவின் தாய் சரோஜ் ராம் பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸைச் சேர்ந்தவர். மேலும், 1990ம் ஆண்டுக்கு பின் கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற 2-வது பெண்மணி அனிதா ஆனந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகம் பே ாற்றும் பெ ருமை உடையது நமது தமிழகம் .இதற்கு ஓர் எடுத்துக் காட்டு நம் தமிழகபபெண்மணி அனிதா கனடா நாட்டில் மந்திரி யாக பதவி ஏற்றது. அனிதாவின் பணி சிறக்க ‘கல்கி” வாசகர்கள் சார்பாக வாழ்த்துவே ாம்.
து.சே ரன்
ஆலங்குளம்
தென்காசி மாவட்டம்