இ-முன்னேற்றம்: தமிழ் வலைத்தளங்களை முதல்வர் ஸ்டாலின் தொடக்கம்!

இ-முன்னேற்றம்: தமிழ் வலைத்தளங்களை முதல்வர் ஸ்டாலின் தொடக்கம்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் தகவல் தொழில் நுட்பவியல் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள 'இ -முன்னேற்றம்' மற்றும் 'தகவல் தொழில்நுட்ப நண்பன்' ஆகிய இரண்டு வலைத்தளங்களையும் கீழடி தமிழிணைய ஒருங்குறி மாற்றி ஆகிய இரு தமிழ் மென்பொருட்களையும் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகளை கண்காணிப்பதற்காக இ-முன்னேற்றம் என்ற வலைத்தளத்தை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் அரசு துறைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். மேலும் 'தகவல் தொழில்நுட்ப நண்பன்' என்ற தளத்தின் வாயிலாக தகவல் தொழில்நுட்பத் தகவல்கள், அனைத்து கொள்கைகள் அரசாணைகள் மற்றும் ஒப்பந்தப் புள்ளிகளை எளிதில் பார்வையிட இயலும்.

தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கணினி விசைப்பலகை மற்றும் தமிழணைய ஒருங்குறி மாற்றி ஆகிய இரு தமிழ் மென்பொருட்களையும் பல புதிய வசதிகளுடன் மேம்படுத்திட கீழடி தமிழ் இணைய விசைப்பலகை மற்றும் தமிழணைய ஒருங்குறி மாற்றி என பெயர் மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com