கர்நாடகாவில் பரவும் புதிய உருமாறிய கொரோனா: அரசு எச்சரிக்கை!

கர்நாடகாவில் பரவும்  புதிய உருமாறிய கொரோனா: அரசு எச்சரிக்கை!

கர்நாடகாவில் புதிய '.ஒய்., – 4.2′ என்ற உருமாறிய கொரோனா, இருவருக்கு பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா 2-வது அலை பரவலுக்குப் பின் இப்போது '.ஒய்., – 4′ என்ற புதிய உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இது மத்திய பிரதேசம், ஆந்திரா, கேரளா, தெலங்கானா, மஹாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீரில் பரவி வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவிலும், இருவருக்கு இந்த புதியவகை கொரோனா தாக்கியுள்ளதாக மத்திய சுகாதார துறை அறிவித்துள்ளது.

இது குறித்து கர்நாடக மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சுதாகர் கூறியதாவது:

ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய வெளீநாடுகளில் இந்த புதியவகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. நம் நாட்டிலும் கர்நாடகா உடபட பல மாநிலங்களில் இது கண்டறியப் பட்டுள்ளது. ன்றி, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிராவிலும் புதிய உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இதுகுறித்து முதல்வர் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் விரைவில் முக்கிய ஆலோசனை நடத்தப்படும்.தொற்று பரவல் வேகம் குறித்து ஆராய்ந்து, அரசின் கவனத்துக்கு உடனடியாக தெரிவிக்கும்படி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு கர்நாடக சுகாட்ட்தாரத்துறை அமைச்சர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com