0,00 INR

No products in the cart.

1 வாரகால தென் மாவட்டச் சுற்றுப் பயணம்: சசிகலா இன்று தொடக்கம்!

அதிமுக தொண்டர்களின் ஆதரவைப் பெற்ம் வகியில் தென்மாவட்டங்களில் ஒரு வார கால அரசியல் சுற்றுப் பயணத்தை சசிகலா இன்று தொடங்க்னார். அவரது ஆதரவாளர்கள் ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைத்தனர்.

அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக அக்கட்சியில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் .பன்னீர் செல்வம், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள் என்று கூறினார். அவரின் இந்த கருத்தால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அக்கட்சி துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதிபட கூறியுள்ளார்.

இந்நிலையில் கட்சித் தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்ட ஒரு வாரகால அரசியல் சுற்றுப்பயணத்தை சசிகலா தொடங்கியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது

இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் தெரிவித்ததாவது:

சசிகலா தஞ்சையில் நாளை நடைபெறவுள்ள டிடிவி தினகரன் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கிருந்து 28-ம் தேதி மதுரை சென்று முத்துராமலிங்க தேவர் மற்றும் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். 29-ம் தேதி ராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்தித்தபின், 30-ம் தேதி காலை பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் பங்கேற்கும் சசிகலா, அன்றைய தினமே தஞ்சை திரும்புகிறார். நவம்பர் 1-ம் தேதி தஞ்சை, அதன் பின்னர் திருநெல்வேலி உள்பட மேலும் சில மாவட்டங்களுக்கும் அவர் செல்லவிருக்கிறார்.

இவ்வாறு சசிகலாவின் பயண விபரம் தெரிவிக்கப் பட்டுள்ளது..

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

தமிழகத்தில் புதிய வகை கொரோனா; மாஸ்க் கட்டாயம்!

0
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 4-வது அலை பரவியுள்ளதாக கருதப்படுகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் கொரோனா அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், தமிழகத்தில் புதிய...

டெல்லி சென்றார் ஓபிஎஸ்!

0
அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை குறித்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில் நேற்று அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்திலுள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.  அதிமுக-வில் ஒற்றைத் தலைமை கருத்துக்கு தீவிர...

திரௌபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல்!

0
நாட்டின் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தலில் பாஜக-வுடனான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு இன்று அப்பதவிக்கான தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை...

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி; நெல்லை அணி அபாரம்!

0
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம், கோவை ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறுகிறது....

கல்யாணத்தில் கலாட்டா: நண்பனைச் சுட்ட மணமகன்!

0
உத்தரபிரதேசத்தில் திருமணக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, மணமகன் துப்பாக்கியால் சுட்டதில் அவரது நண்பர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் பிராம்நகரைச் சேர்ந்தவர் மணீஷ் மதேஷியா (25). இவருக்கும் அதே...