பூட்டிய வீடுகளை கண்காணிக்க புதிய ஆப்: கோவையில் அறிமுகம்!

பூட்டிய வீடுகளை கண்காணிக்க புதிய ஆப்: கோவையில் அறிமுகம்!
Published on

கோயம்புத்தூரில் பூட்டிய வீடுகள் குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க மாவட்ட போலீஸ் சார்பில் பிரத்யேக செயலி 'சகோ' புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இதுகுறித்து கூறியதாவது:

பொதுமக்கள் தங்களது செல்போன் மூலமாக என்ற இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 'சகோ'. வீட்டை பூட்டி விட்டு செல்லும் பொதுமக்கள் முதலில் இந்த செயலியில் தங்களுடைய செல்போன் எண்ணை பதிவிட வேண்டும். அதற்கு ஓடிபி எண்ணைப் பதிவு செய்து உள்ளே நுழையலாம். தங்களது வீட்டின் முகவரி, எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை வீடு பூட்டப்பட்டிருக்கும், எந்த ஊருக்குச் செல்கிறீர்கள் என்பது போன்ற விவரங்களை அதில் பதிவு செய்ய வேண்டும். அதை தொடர்ந்து தானாகவே சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு தகவல் சென்றுவிடும். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட போலீசார், அந்த முகவரியை முகவரிக்கு நேரடியாக சென்று கொள்ளை சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு பணியை மேற்கொள்பவர். மேலும் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று வீட்டின் முகப்பு பகுதியை புகைப்படம் எடுத்து பதிவு செய்வர். எந்த போலீசார் அங்கு சென்று ரோந்து பணியை மேற்கொண்டார்கள் என்பது குறித்த விவரங்கள் செயலி மூலமாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். செல்போன் பயன்படுத்தாத பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தங்களின் வீடு பூட்டப்பட்டிருக்கும் குறித்த தகவலை தெரிவிக்கலாம்.

-இவ்வாறு அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com