0,00 INR

No products in the cart.

திருவாரூர் தியாகராஜர் கோவில் குளக்கரை: கனமழையால் இடிந்து விழுந்தது!

திருவாரூரில், கனமழையின் காரணமாக தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலயக் குளத்தின் தென்கரை 100 மீட்டர் இடிந்து விழுந்ததுஇதனால், அதுமட்டுமன்றி தென்கரையில் சாலைகள் முழுவதுமாக விரிசல் விடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி, இந்த பகுதியில் போக்குவரத்து காவலர்கள் பேரிகார்டு அமைத்து போக்குவரத்தை துண்டித்து உள்ளனர்.

திருவாரூரில் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலயக் குளம் உள்ளது. இந்தக் கோயிலில் ராஜராஜசோழன் வந்து வழிபட்டுச் சென்றதாக வரலாறு உள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோயில் ஐந்து வேலியும், குளம் ஐந்து வேலியும் என்ற சம நிலப்பரப்புடன் இந்த குளம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், இந்த குளத்தின் தென்கரை, வடகரை, மேற்குக்கரை, உள்ளிட்ட நான்கு கரைகளிலும் இந்து சமய அறநிலை துறை சார்பில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்று கனமழையின் காரணமாக கமலாலயக் குளத்தின் வடகரையில் மேற்குக் கரையும் இடிந்து விழுந்தது. இதற்கு காரணம் இந்தப் பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதே என பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர். அதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் இந்தப் பகுதிகளில் கனரக வாகனம் செல்வதற்கு அனுமதி மறுத்தது. அதன் பின்னர் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய சுற்று சுவர் கட்டப்பட்டது.

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், திருவாரூர் நகராட்சிக்கு எதிர்புறமாக உள்ள கமலாலய குளத்தில் தென்கரை 100 மீட்டர் தூரம் முழுமையாக இடிந்து விழுந்துள்ளது. அதுமட்டுமன்றி தென்கரையில் சாலைகள் முழுவதுமாக விரிசல் விடப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து காவலர்கள் பேரிகார்டு அமைத்து போக்குவரத்தை துண்டித்து உள்ளனர்.மேலும், பாதிக்கப்பட்ட இடத்தில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், திமுக நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் இடிந்து விழுந்த இடத்தை நேரடியாக சென்று ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து தியாகராஜர் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா வந்த பொதுமக்கள் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த இடத்தில் குவிந்தவண்ணம் உள்ளனர்.

மேலும், சுற்று சுவர் இடிந்து விழுந்த இடத்தில் மின் கம்பங்களும் சாய்ந்து உள்ளதால் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன, உடனடியாக அந்த பகுதியில் உள்ள மின் கம்பங்களை சரி செய்ய மின் வாரிய துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தப் பகுதியில் தனியார் பள்ளி மற்றும் தனியார் மருத்துவமனையில் அதிக அளவில் இருக்கின்றன.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,880FollowersFollow
1,600SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

#Breaking: ராணுவ தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் பலி!

0
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் ராணுவ தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் அவரது மனைவி உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். கோவை சூலூர்...

குளிர்கால ஒலிம்பிக்ஸை புறக்கணித்தால் நல்லுறவு பாதிக்கப்படும்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

0
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸை அமெரிக்கா புறக்கணித்தால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நல்லுறவு பாதிக்கப்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்னும் 2 மாதங்களில் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளை புறக்கணிக்கப்...

சமையல் எரிவாயு சிலிண்டர் எடை குறைப்பு: மத்திய அமைச்சர் அறிவிப்பு!

0
நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டரின் எடையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: நாட்டில் இப்போது நடைமுறையிலுள்ள...

‘இன்னுயிர் காப்போம்’ திட்டம்: தமிழகத்தின் 610 மருத்துவமனைகளில் முதல்வர் துவக்கி வைப்பு!

0
தமிழகத்தில் சாலை விபத்துகளில் காயமடைபவர்களை காப்பாற்ற வழிசெய்யும் வகையில் 610 மருத்துவமனைகளில் ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தை இம்மாதம் 18-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கப் போவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் சாலை...

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்புக்கு அனுமதி!

0
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வருகிற 14-ம் தேதி நடைபெறவுள்ள சொர்க்க வாசல் திறப்புக்கு கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என திருச்சி ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சி ஆட்சியர் சிவராசு வெளியிட்ட...