உத்திர பிரதேச முதல்வர் நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்!

உத்திர பிரதேச முதல்வர் நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

உத்தரபிரதேசத்தில் பஸ்தி மாவட்டத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்க இருந்தார். அவரது வருகைக்கு முன்னதாக நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் கைத்துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் அமர்ந்திருந்ததை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அந்த மர்ம நபர் அரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர்  துப்பாக்கியுடன் ஏன் முதல்வர் நிகழ்ச்சிக்கு வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதேசமயம் அச்சமயத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரின் அலட்சியத்தால்தான் மர்ம நபர் துப்பாக்கியுடன் உள்ளே நுழைய முடிந்தது என்கிற விமர்சனமும் எழுந்தது.

இந்நிலையில் அந்நிகழ்ச்சியின்போது பணீயில் இருந்த 7 போலீசார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதாக பஸ்தி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ஶ்ரீவத்ஸவா விளக்கமளீத்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com