காசி விஸ்வநாதர் கோயில் வளாகம்: பிரதமர் மோடி இன்று திறப்பு!

காசி விஸ்வநாதர் கோயில் வளாகம்: பிரதமர் மோடி இன்று திறப்பு!

காசி விஸ்வநாதர் கோவிலுக்கு கங்கை நதியில் இருந்து செல்லும் போது குறுகிய தெருக்கள் வழியாகவும் , சாலை வழியாகவும் செல்ல வேண்டியிருந்தது.

இதனால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியதால், கங்கை நதியிலிருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் வகையில் கடந்த 2019 மார்ச் 8ஆம் தேதி ரூ.339 கோடியில் காசிவிசுவநாதர் வளாக திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். திட்டத்தின் பணிகளுக்காக 300 சிறு கடைகள் கையகப்படுத்தப்பட்டது. 1400 கடைக்காரர்களிடம் சுமுகமாக பேசி இழப்பீடு வழங்கி இடங்களை கைப்பற்றி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரலாற்று சிறப்புமிக்க காசி விஸ்வநாதர் கோயில் நடை பாதையை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசி செல்கிறார். முதற்கட்டமாக காசி விஸ்வநாதர் திட்டத்தின் மூலம் 23 கட்டிடங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார். இதில் அருங்காட்சியகம், புகைப்பட அருங்காட்சியகம், உணவுவிடுதி ஆகியவையும் அடங்கும்.

இந்நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேசம், அசாம் ,அருணாச்சலப்பிரதேசம், கோவா, குஜராத், அரியானா ,இமாச்சல பிரதேசம் ,கர்நாடகா, மத்திய பிரதேசம் ,மணிப்பூர், திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி இன்று நண்பகல் 12 மணிக்கு கால பைரவர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். பிறகு அங்கிருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் அவர் அங்கு தரிசனம் செய்துவிட்டு பிற்பகல் 1 மணியளவில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதன்பின் இன்று மாலை 6 மணிக்கு கங்கையில் பங்கேற்கும் பிரதமர் மோடி, நாளை பிற்பகல் 3 மணியளவில் வாரணாசியில் உள்ள மகாமந்திர் சத்குரு சதாபல்தியோ விஹான்கம் யோக சன்ஸ்தானின் 98-வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com