0,00 INR

No products in the cart.

காதலுக்கு மரியாதை

ஹர்ஷா

ன் காதலுக்காக நாட்டின்  மன்னராகும் வாய்ப்பை தியாகம் செய்து முடி துறந்து சரித்திரத்தில் இடம் பெற்ற இளவரசர்களை நாம் அறிவோம். கடந்த சில ஆண்டுகளில் இங்கிலாந்து அரச குடும்பத்தில் கூட நிகழ்ந்திருக்கிறது,  பிரிட்டனின் இளவரசர் பிரின்ஸ் ஹாரி, மேகன் மார்கல் அரச வாழ்வைத் துறந்துவிட்டனர்.

இப்போது தன் காதலுக்கு மரியாதையாக இளவரசி பட்டத்தை இழந்த ஒரு இளவரசியின் கதை.

ஜப்பான் பேரசர் நருஹிட்டோ. இவரது மருமகள் மகோ. இளவரசியின் அந்தஸ்த்தில் உள்ளவர். இவர் அரச குடும்பத்தைச் சாராத கெய் கொமுரோ என்பவரைக் காதலித்து வந்தார். அரசக் குடும்பத்துப் பெண்கள் சாதாரண நபர்களைத் திருமணம் செய்துகொள்ள ஜப்பானில்  தடை உள்ளது.  அப்படி திருமணம் செய்து கொள்ளவிரும்பினால்
இளவரசி பட்டத்தைத் துறக்க வேண்டும். சொத்துகளை விட்டுக்கொடுக்க வேண்டும்.

மன்னர் இவர்களது காதலை ஏற்காமல் திருமணத்துக்கு முட்டுகட்டை போட்டுக்கொண்டிருந்தார்.  ஆனால்,  மகோ தன் காதலைக் கைவிட தயாராக இல்லை. சினிமாக்களில் வரும் வில்லன்கள் போல மகோவின் காதலன் கொமுரோவை ஜப்பான ராஜ குடும்பம் விசாரணைக்கு உரிய நபராகவே அறிவித்தது. காரணம், கொமுரோவின் முன்னாள் காதலியிடம் அவரது தாயார் கடன் வாங்கிய விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறது. இதனால், கொமுரோ தனது மீதான தவறான பிம்பம் விழுவதைத் தவிர்க்க அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கு சட்டம் பயின்றுவந்தார்.

மகளின் மனதை மாற்றமுடியாது என்பதை உணர்ந்த மகோவின் தந்தை அகிஷினோ, அண்மையில் திருமணத்தை தான் ஆதரிப்பதாக மன்னரிடம் சொல்லி அனுமதி வேண்டினார். ஆனால் மன்னர்  மகோ திருமணத்துக்கு பொதுமக்களின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், மகோ பல ஆண்டுகள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காதலுக்காக அரச குடும்பத்தின் சொத்தை விட்டுக்கொடுத்து இளவரசி பதவியைத் துறப்பதாக அறிவித்து, பொதுமக்களின் அங்கீகாரத்தை வேண்டினார். மக்களில் பலர் இளவரசியின் செயலைப் பாராட்டி வாழ்த்தினர்.

இதற்காக அவர் விட்டுக்கொடுத்த சொத்தின் மதிப்பு  எவ்வளவு தெரியுமா? 137 மில்லியன் யென் அதாவது 1.2 மில்லியன் டாலர் (ஒரு மில்லியன் 10லட்சம்)

அது மட்டுமில்லாமல், காதலுக்காக அரச குடும்பத்தின் சொத்தை விட்டுக்கொடுத்த ஜப்பான் நாட்டு இளவரசி மகோ, தன் காதலனை  பாரம்பரிய விழாக்கள் இல்லாமல், சாதாரண நபரைப் போல் திருமணம் செய்துக்கொள்ளவிருக்கிறார். இந்த ஜோடி, வழக்கமான கொண்டாட்டங்களைத் தவிர்த்து சாமான்யர்களைப் போல் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ள செய்தி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. .

29 வயதான மகோ, திருமணம் செய்தபின்னர் ’இளவரசி’ என்ற பட்டத்தை இழந்துவிடுவார். திருமணத்துக்குப் பின்னர் மகோ தனது கணவருடன் அமெரிக்காவுக்கு குடிபெயரவிருக்கிறார்..

மகோவின் சகோதரர் இளவரசர் ஹிசாஹிடோ. இவர்தான் இப்போதைக்கு ஒரே ஆண் வாரிசு. இவர்தான் ஜப்பானின் அரியணைக்கு உரிமையுள்ளவர்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

செல்சாரைத் தேடிய ரா.கி.ரா

1
சுஜாதா தேசிகன்                                             ...

உங்கள் குரல்

1
தடுப்பூசி போடுவதில் சாதனை படைத்துள்ள  தமிழக அரசை பாராட்டி, ’அந்தப் பணியை செம்மையாக நிறைவேற்றிய செவிலியர்கள்/மருத்துவர்கள் கடவுளின் தூதர்களாகப் பார்க்கப்படுவார்கள். அவர்களை மனதார பாராட்டி நன்றி சொல்லி பெருமிதம் கொள்வோம்’  என்ற கல்கியின்...

விமானத்தின் வேகத்தில் ரயில் பயணம் !

0
இஸ்ரோ விஞ்ஞானி சசிக்குமார் சந்திப்பு:  ராசி பாஸ்கர் “சக்கரத்திற்கும் சாலைக்கும் உள்ள உராய்வும், காற்றினால் ஏற்படும் உராய்வும், நாம் வேகமாகச் செல்வதற்குத் தடையாக இருப்பதோடு அதிக ஆற்றல் செலவினத்தை உருவாக்குகிறது. இந்த இடையூறுகளிலிருந்து விடுபட்டு வேகமாகப்...

போராடி அலையும் யானைகளின் கதை

0
சரஸ்வதி காயத்திரி (வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழு) வலசை அச்சுக்கு வருவதற்கு முன்பே விருது பெற்றிருக்கும் சு.வேணுகோபாலின் இரண்டாவது நாவல் என்ற சிறப்பும் இதற்கு உண்டு ஒரு விவசாயியாக , இந்த நிஜ உலகைப்...

 பொலிடிகல் பிட்ஸா

0
 கௌதம் ராம் வீரிட்டு எழும் வருண் காந்தி ஆளும் பா.ஜ.க. தரப்பில் பொதுவாக காந்தியை உயர்த்திப் பிடித்தாலும், அவர்களுக்குள்ளே ஒரு கூட்டம் காந்தியை அவமதிப்பதும், கோட்சே துதி பாடுவதுமாக இருக்கிறார்கள். வழக்கம்போல, இந்த வருட காந்தி...