0,00 INR

No products in the cart.

மூங்கில், நண்டு, வாழை, மனிதன்!

கடைசிப் பக்கம்

சுஜாதா தேசிகன்

 

ந்த வாரம் மீண்டும் சென்னை விஜயம். காலை நடையில் தி.நகர்
‘ஹாட் சிப்ஸ்’ல் காஃபி சாப்பிடும்போது  விஜயதசமி முடிந்து வாழை தோரணங்கள் வாடி வதங்கி அதன் அடிப் பகுதியில் தண்டு சின்னதாக எட்டிப் பார்த்து வளர்ந்து இருந்தது. அருகே ஆலமர இளம் தளிர் விழுதுகள் காலை சூரியக் கதிர்களில் பளபளத்தது.

கீழ்நோக்கி வளரும் வாழைத் தண்டு பிழைக்க போவதில்லை. அந்த ஆலமர விழுதுகளும் ‘ஸ்மார்ட் சிட்டி’ பிளாட்ஃபாரத் தரையைத் தொடப் போவதில்லை. ஆனால் எந்தக் கவலையும் இல்லாமல் இவை வளர்ந்துகொண்டு இருக்கிறது.

”எப்படி வளர்கிறோம்” என்ற கவலை மனிதர்களுக்கு மட்டும்தான். கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
‘டவுன் சிண்டிரோம்’ பரிசோதனைகள் இந்தியாவில் இருபது வருடம் முன் ஆரம்பம் ஆகியது. வெளிநாட்டுச் சொந்தங்கள் ’எதுக்கும் ஒரு டிரிபிள் டெஸ்ட் எடுத்துக்கோ’ என்று சிபாரிசு செய்ய குடும்பங்கள் இந்தப் பரிசோதனைகள் செய்யும் இடம் தேடி ஓட ஆரம்பித்தார்கள்.

மனித உடலின் ஒவ்வொரு செல்லிலும், 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. கருத்தரிக்கும் நேரத்தில் அம்மா அல்லது அப்பாவிடமிருந்து 21வது குரோமோசோமில் ஓர் எக்ஸ்டரா குரோமோசோம் பெற்று பிறக்கும் குழந்தைக்கு மரபணு சம்பந்தப்பட்ட குறைபாடுகள் ஏற்பட்டு, இதன் விளையாக குழந்தைக்கு மூளை, நரம்பு சார்ந்த கோளாறுகள் உண்டாக வாய்ப்பு உண்டு. இதனால் பிறக்கும் குழந்தை அறிவு வளர்ச்சி குன்றி, கண், மூக்கு போன்றவை வித்தியாசமான தோற்றத்தில் பிறக்க வாய்ப்பு இருக்கிறது.

கர்ப்பத்தின் மூன்றாவது மாதத்தில் செய்யப்படும் இந்தப் பரிசோதனையில் இந்தக் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு 0.1%. அதாவது ஆயிரத்தில் ஒருவருக்கு! பரிசோதனை முடிவு பாஸிடிவ் என்று வந்தால் ( சில பரிசோதனைகள் தப்பாக ‘ஃபால்ஸ் பாசிட்டிவ்வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது)  மேலும் அம்னோசென்டெசிஸ் போன்ற சோதனை சிகிச்சை இன்று தொடரும்.

சில மாதங்கள் முன் ’மிமி’ என்ற ஹிந்தி படத்தைப் பார்த்தேன். குழந்தை இல்லாத அமெரிக்கத் தம்பதியினர், வாடகை தாயைத் தேடி இந்தியா வருகிறார்கள். திருமணம் ஆகாத நடனப் பெண் மிமியை தேர்ந்தெடுக்கிறார்கள். பணம் கிடைத்தால் தன் வாழ்க்கையின் லட்சியமான ‘பெரிய நடிகை ஆகலாம்’ என்ற கனவில் மிமியும் வாடகைத் தாயாக இருக்க சம்மதிக்கிறாள்.

கர்ப்பம் தரிக்க மிமிக்கு  ‘டவுன் சிண்டிரோம்’  பரிசோதனையில் பிறக்கப் போகும் குழந்தை குறைபாடுகளுடன் பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறி கருவைக் கலைக்க  சிபாரிசு செய்கிறார்கள். மிமி ’கருவைக் கலைக்க மாட்டேன்’ என்று அடம்பிடிக்க,  வெளிநாட்டுத் தம்பதிகள் ’குறைபாடு உள்ளக் குழந்தை தங்களுக்கு வேண்டாம்’ என்று இந்தியாவை விட்டு ‘எஸ்ஆக’, குழந்தை எந்தக் குறைபாடும் இல்லாமல் நல்லவிதமாக பிறந்து வளர்கிறது(ஃபால்ஸ் பாசிட்டிவ்!).

சில வருடங்கள் கழித்து இதை அறிந்த வெளிநாட்டுத் தம்பதிகள் திரும்ப வந்து குழந்தையைக் கேட்க, அந்த குடும்ப சிக்கலே படத்தின் கதை.

வாடகைத் தாய் என்பவள் தாயா ?  குறை என்பதற்காகச் சிசுவைக் கொல்லலாமா ? போன்ற கருத்துக்களை விவாதம் செய்யலாம்.  ஆனால் அந்தப் பரிசோதனை முடிவு வரும் வரை அந்தத் தாய் படும் மன உளைச்சலை விவரிக்க முடியாது.

இந்த மன உளைச்சல் மனிதர்களுக்கு மட்டும்தான். விலங்கு, தாவரங்களுக்கு கிடையாது. ஹிரண்யகசிபு பிரகலாதனை பெற்றதை மூங்கிலினிடத்து உண்டான நெருப்பு போலவும், நண்டு தரித்த கர்ப்பம் போலவும், குலை ஈன்ற வாழை போலவும் இருந்தது என உவமையாகக்  கூறுவார்கள்.

                                                                உவமை

மூங்கில் ஒன்றோடு ஒன்று உரசும் போது தீப் பற்றி அந்த மூங்கிலே எறிந்து போகும். கர்ப்பம் தரித்த நண்டு பிரசவிக்கும் போது இறந்துவிடும்.         குலை ஈன்ற வாழை மடிந்துவிடும்.

இது மாதிரி நடக்கும் என்று மூங்கில், நண்டு, வாழைக்கு முன்பே தெரிந்தால் என்ன நடக்கும் என்று யோசித்ததுண்டு!

3 COMMENTS

 1. அருமையான படைப்பு! அபரிமிதமான கற்பனை வேண்டாமே தேசிகன்! ஆண்டவன்
  படைச்சான்! எங்கிட்டே ‌கொடுத்தான்! அனுப்பி ராஜா என்று அனுப்பி வைத்தான்! என்று முன்நோக்கி செல்லுங்கள்!
  திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

 2. ‘மிமி’ திரைப் படம் பார்த்து மூங்கில்,நண்டு, வாழை, மனிதன் என்று
  பிறப்பின் தன்மையை ஒப்பிட்டு விவரித்து
  கட்டுரை யைத் தந்த சுஜாதா தேசிகன்
  பாராட்டுக்குரியவர்.
  து.சே ரன்
  ஆலங்குளம்

 3. மூங்கிலை முன் வைத்த தேசிகனுக்கு நன்றி
  கனலானதே கானம்
  புல்லாங்குழலாகும் மூங்கில் காட்டில்
  புயலாகப் புகுந்தே பலமான காற்று!
  சில்லென்று வீசிய காற்றின் சீற்றம்
  சிராய்த்திற்றே மூங்கிலை உரசி மோதி
  சுல்லென்றுபொரித்த சுடரும் சட்டென
  சுட்டெரிக்கும் கனலா யிற்றே!
  நல்லகானம் இசைத்த மூங்கில் அந்தோ!
  நலிவிழந்து கருதிக் கனலாய் மடிந்ததே!ங

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

சிவாஜி வீட்டுக்குப் பக்கத்தில்…

0
 ஒரு நிருபரின் டைரி - 26 - எஸ். சந்திரமெளலி   நான் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 2021 வரை சென்னை தி. நகர் தெற்கு போக் ரோடில் வசித்து வந்தேன்.  சிவாஜிக்கு  ‘செவாலியே’ விருது...

நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி கதி கலங்க வைத்த நகரம்

0
 உலகக் குடிமகன் -  25   - நா.கண்ணன் ஜப்பான் குறைந்த காலத்தில் மிக உயர்ந்த நாடாக மாறியதற்குக் காரணங்கள் உள்ளன. முதலில் அவர்கள் ஐரோப்பிய வாழ்வியலைக் கடைப்பிடித்தனர். ஐரோப்பிய தரம் வாழ்வில் இருக்க வேண்டும் எனப்பாடுபட்டனர்....

பெயிண்டர் துரை

0
மனதில் நின்ற மனிதர்கள் - 1 மகேஷ் குமார்   நல்ல நெடு நெடுவென ஒடிசலான தேகம். சுமார் 40 வயது இருக்கலாம். சுருள் சுருளாக தலைமுடி. ஏதேதோ பெயிண்ட் துளிகள் தெளித்து, சரியாக சுத்தம் செய்யாமல்...

   குன்றென நிமிர்ந்து…

வித்யா சுப்ரமணியம்    நவம்பர் 1990 கொட்டும் மழையில் ஆட்டோ பிடித்து மைதிலி பேருந்து நிலையத்தில் நுழைந்தபோது பேருந்து ஒன்று புறப்படத் தயாராக இருந்தது. தன் சேலையைப் பற்றிக் கொண்டிருந்த மூன்று வயது மகள் மாயாவை...

சாத்தானின் வக்கீல்

0
ஒரு நிருபரின் டைரி - 25 - எஸ். சந்திரமெளலி   ஆங்கில நியூஸ் சேனல்களில் மூத்த பத்திரிகையாளர்கள் பிரபலங்களுடன் உட்கார்ந்துகொண்டும், நின்றுகொண்டும், நடந்துகொண்டும் உரையாடும் நிகழ்ச்சிகள் பல இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது கரன் தாபருடைய...