0,00 INR

No products in the cart.

கடலை அடைத்த கருணாமூர்த்தி!

பழங்காமூர் மோ.கணேஷ்

ம்மண்ணுலகில் சத்தியத்தையும் தர்மத்தையும் நிலைநாட்டிட, அந்தப் பரந்தாமனே எடுத்த அற்புத அவதாரம்தான் ஸ்ரீராமச்சந்திர பிரபு. ஸ்ரீராமர் ராவணனை வதம் செய்ய இலங்கைக்குச் செல்லும் முன்பு தென்நாட்டின் பல இடங்களில் இறை வழிபாடுகளை மேற்கொண்டார். அதோடு, பல அற்புதங்களையும் நிகழ்த்தியுள்ளார். அவ்வகையில், தென்னாடு வந்த ஸ்ரீராமபிரான், முதலில் உப்பூரிலே கணபதியை ஸ்தாபிதம் செய்து வழிபடுகின்றார்.

அதன் பின்னர், குல குரு வசிஷ்ட மகரிஷியின் ஆலோசனைப்படி பிதுர்கடன்களைச் செய்ய உசிதமான, அன்னை பராசக்தியின் அக்குள் பகுதி விழுந்து, வீரசக்தி பீடமாகத் திகழும் தேவிபட்டினத்தை அடைந்து, அன்னையின் திருவருளைப் பெற்று கடற்கரையில் முறையாக பிதுர்கடன்களைச் செய்தார். அப்போது, கடலில் நவபாஷாணத்தால் ஆன நவக்கிரகங்களை ஸ்தாபிக்க எண்ணம் கொண்டார். ஆனால், சமுத்திரத்தின் அலைகள் ஆக்ரோஷமாக இருப்பதைக் கண்டு தயங்கி நின்றார். அந்தக் கடற்கரையில் ஆதியாக வீற்றிருந்து அருளும் ஸ்ரீ ஆதிஜகந்நாதப் பெருமாளை மனதில் நினைத்து வழிபடுகின்றார்.

பரந்தாமனின் அவதாரமே ஸ்ரீராமர் என்றபோதிலும், மனிதனாகப் பிறப்பெடுத்தால் மகாவிஷ்ணுவை சரணடைய வேண்டும் என்கிற உயர்ந்த தத்துவத்தை உலகோர்க்கு உணர்த்திக் காட்டினார். பின்னர், ஆதிஜகந்நாதரின் பேரருளால் முன்னம் எழும்பியப் பேரலைகள் இப்போது கடலுக்குள் பின்வாங்கிச் சென்றன. கள்ளழகனின் கருணையால் கடலில் இறங்கிய ஸ்ரீ கோதண்டராமர், முறைப்படி நவபாஷாண நவக்கிரகங்களை அங்கே நிறுவி, நயம்பட பூசனைப் புரிந்து, நம்பிக்கையோடு இலங்கையை நோக்கி வெற்றி நடை போட்டார்.

பொங்கிப் பெருகி வந்த அலைகளை அடைத்தருளியதால், இங்கு ஸ்ரீமந் நாராயணர், ‘கடலடைத்த ஸ்ரீ ஆதிஜகந்நாதப் பெருமாள்’ என்று போற்றப்படுகின்றார்.

தேவிபட்டினம் கடற்கரையில் ஸ்ரீராமபிரானின் கரங்களால் ஸ்தாபிக்கப்பட்ட நவக்கிரகங்களை வணங்கி வழிபட்டு, பின்னர் சற்று தொலைவு நடந்தால், விமானத்துடன்கூடிய பெருமாள் கோயில் ஒன்று காணப்படுகின்றது.

கோயிலின் முன்மண்டபத்தில் பலிபீடம் மற்றும் பெரிய திருவடியான
ஸ்ரீ கருடாழ்வார் தரிசனம்
. மகாமண்டபத்தின் வெளிப்புற சுவற்றில் ஸ்ரீ ஆஞ்சனேயர் அருள்பாலிக்கின்றார். பிறகு, நேராக அர்த்தமண்டபம் அடைந்து, ஸ்ரீதேவி பூதேவி உடனான கடலடைத்த ஸ்ரீ ஆதி ஜெகந்நாத பெருமாளை தரிசித்து பரவசம் அடைகின்றோம். மேலிரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தி, கீழிரு கரங்களில் அபய, வரதம் காட்டி, பெரியதொரு திருமேனியராக அமர்ந்த கோலத்தில் அருட்சேவை சாதிக்கின்றார்.

த்ஸவ மூர்த்திகளாக ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ சுதர்சனர் உள்ளனர். நடுவே அன்னை சீதாபிராட்டி மற்றும் இளவல் லக்ஷ்மணரோடு திவ்ய தரிசனம் அளிக்கிறார்
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி
. ஆலயத்தை வலம் வருகையில் சூடிக்கொடுத்த சுடர்கொடியாம் ஆண்டாளை தனிச் சன்னிதியில் தரிசிக்கின்றோம். ஒரே திருச்சுற்றினைக் கொண்டுள்ளது இந்த ஆலயம்.ஸ்ரீ விமானம் காண்போரைக் கவர்ந்திழுக்கிறது. பாண்டிய மன்னர்களின் கலைநயம் ஆலயமெங்கும் பிரதிபலிக்கின்றது.

தல தீர்த்தமான சக்கர தீர்த்தம் ஆலயத்தின் எதிரே அமைந்துள்ளது. பாஞ்சராத்ர
ஸ்ரீ வைஷ்ணவ முறைப்படி தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகின்றது. அனேக வைஷ்ணவ சம்பிரதாயங்களும், விசேஷங்களும் கோயிலில் கடைபிடிக்கப்படுகின்றன.

இந்தத் திருத்தலத்தில் கடலடைத்த பெருமாளோடு, நவபாஷாண நவக்கிரகங்கள்,
ஸ்ரீ திலக்கேஸ்வரர் ஆலயம் மற்றும் சக்தி பீடமான ஸ்ரீ உலகநாயகி அம்மன் ஆலயம் போன்றவையும் பிரசித்தம் பெற்று விளங்குகின்றன. ஆடி அமாவாசையில் இங்கு லட்சக்கணக்கானோர் வந்து பிதுர் வழிபாடுகள் செய்வது மிகவும் பிரபலமாகும்.

அமைவிடம் : புதுக்கோட்டை ராமேஸ்வரம் பேருந்து சாலையில் சுமார் 115 கிலோ மீட்டர் தொலைவிலும், ராமநாதபுரம் நகரிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது தேவிபட்டிணம்.
தரிசன நேரம் : காலை 7 முதல் மதியம் 11 மணி வரை. மாலை 5 முதல் இரவு 7 மணி வரை.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

கன்னியர் கோயில் ஆடி வெள்ளி திருவிழா!

0
- முத்து.இரத்தினம் புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பச்சைவாழி அம்மன் சமேத மண்ணாதீஸ்வரர் திருக்கோயில். பார்வதி தேவிக்கு உதவிய கன்னியர்களுக்கென்றே உருவான திருக்கோயில் இது என்று சொல்லப்படுகிறது. ‘கன்னியர் கோயில்’ என்றே அழைக்கப்படும் இத்திருக்கோயில்...

சயனக் கோலத்தில் ஸ்ரீ பத்ர மாருதி!

0
- லதானந்த் ஸ்ரீராம பக்த அனுமனை பொதுவாக நின்ற திருக்கோலத்திலோ, சஞ்சீவி மலையைத் தாங்கியபடியோ அல்லது சேவித்த கரங்களுடனோதான் தரிசித்திருப்போம். ஆனால், அனுமன் அபூர்வமாக உறங்குகின்ற திருக்கோலத்தில் மஹாராஷ்ட்ரா மாநிலம், ஔரங்காபாத் அருகே குல்தாபாத்...

அரச மரத்தடியில் அன்னை முப்பாத்தம்மன்!

- தனுஜா ஜெயராமன் தலைநகர் சென்னையில் அமைந்த மிகவும் பழைமை வாய்ந்த அம்மன் கோயில்களில் தியாகராயநகர் அருள்மிகு முப்பாத்தம்மன் திருக்கோயிலும் ஒன்றாகும். வேண்டியவர்க்கு வேண்டியபடி அருளும் ஸ்ரீ முப்பாத்தம்மன் கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன்...

மன அமைதி தரும் சிந்தபள்ளி சாயிபாபா!

0
- வி.ரத்தினா தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில்  அமைதியும் பசுமையும் நிறைந்த ரம்யமான சூழலில் காட்சி தரும் சிந்தபள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது ஷீர்டி பாபா ஆலயம். ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழிலோடு அமைந்துள்ள பாபாவின்...

இன்னல் தீர்க்கும் இரண்டாம் காசி!

0
- எம்.அசோக்ராஜா விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம்பண்ணை வழியாகச் செல்லும் சாலையில், நடுசத்திரம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு அன்னபூரணி சமேத ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயில். இதை, ‘இந்தியாவின் இரண்டாவது காசி’ என்று...