கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம்: நெம்மேலியில் முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வை!

கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம்: நெம்மேலியில் முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வை!
Published on

சென்னை அருகே நெம்மேலியில் கட்டப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் புதிய சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வர் மு.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டில் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் முதல் நிலையம் 2010-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. அதையடுத்து 2-வது நிலையமாக நெம்மேலியில் 2013ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது.

இந்நிலையில் நெம்மேலியில் இன்று முதல்வர் மு..ஸ்டாலின் நேரில் சென்று சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிட்டார். இந்த நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தென் சென்னையில் அமைந்துள்ள வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளாகத்தைச் சார்ந்துள்ள பகுதிகளுக்குக் குழாய் கட்டமைப்புகள் மற்றும் நீரேற்று நிலையங்கள் வாயிலாக மக்களுக்கு வழங்கப்பட்டு, சுமார் 10 இலட்சம் மக்கள் பயன்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இத்திட்டத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திலிருந்து பல்லாவரம் வரை குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் உள்ளகரம்புழுதிவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், புனித தோமையார் மலை, பல்லாவரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வழித்தடப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 9 இலட்சம் மக்கள் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் .ஆர். ராகுல்நாத் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com