கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!
Published on

புதுச்சேரி கடற்கரையில் கொரோனா விதிமுறைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதிக்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரியில் கொரோனா விதிமுறைகளை தளர்த்தி கிறிஸ்துமஸ், மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப் பட்டது. இந்நிலையில் இங்குள்ள கடற்கரைகளில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக இம்மாதம் 24 மற்றும் 25-ம் தேதிகளிலும், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு டிசம்பா் 30-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதிவரை புதுச்சேரியில் இரவு நேர பொதுமுடக்கத்தில் தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அம்மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com