0,00 INR

No products in the cart.

களைகட்டுகிறது கத்ரினா கைஃப் கல்யாணம்! பானி பூரிக்கு தனி ஸ்டால்!

பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப்புக்கும் விக்கி கவுஷலுக்கும் நடக்கவுள்ள திருமணம் பற்றி பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கத்ரினா கைஃப்பின் தந்தை காஷ்மீரைச் சேர்ந்தவர். தாயார் பிரிட்டன் நாட்டவர். ‘பூம்திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவுக்கு அறிமுகமான, கத்ரினா அடிக்கடி காதல் கிசுகிசுக்களிலும் சிக்கியுள்ளார். இந்நிலையில் அவர் தன்னை விட 5 வயது சிறியவரான நடிகர் விக்கி கவுஷலை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இவர்கள் இருவருக்கும் நாளை (டிசம்பர் 9) ராஜஸ்தானிலுள்ள 700 ஆண்டுகள் பழமையான கோட்டையில் நடைபெற உள்ளது.

இத்திருமணம் குறித்து கத்ரீனா தரப்பில் வெளியான தகவல்கள்:

இந்த திருமணத்திற்கு வெறும் 120 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பாலிவுட் நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வரக்கூடும் என்பதால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மதோப்பூரில் உள்ள கோட்டையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கத்ரீனா கைஃப் விக்கி கவுஷல் திருமணத்தில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண விருந்தில் இந்திய மற்றும் மேற்கத்திய ஸ்பெஷல் கத்ரீனா தனிப்பட்ட முறையில் தேர்வு செய்துள்ளார். திருமண இடத்தில் பானி பூரி, கச்சோரி மற்றும் சாட் ஸ்டால்கள், கபாப்கள் மற்றும் பாரம்பரிய ராஜஸ்தானி உணவுகள் ஆகியவற்றுக்கு தன் ஸ்டால்கள் உண்டு. மேலும் இத்தாலியைச் சேர்ந்த சமையல்காரரால் தயாரிக்கப்பட்ட நீலம் மற்றும் வெள்ளை நிற ஐந்து அடுக்கு டிஃப்பனி திருமண கேக் திருமண விருந்தில் ஸ்பெஷல் ஐட்டமாக இடம்பெறும்.

இவ்வாறு கத்ரீனா திருமணத்தில் இடம்பெறும் விருந்துவகைகள் குறித்து தெரிவிக்கப் பட்டுள்ளது.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

வைரமுத்து திறந்து வைத்த புத்தக வளாகம்! 

0
-லதானந்த்  சென்னை கே.கே.நகர், முனுசாமி சாலையில் அமைந்துள்ள டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர், தோழர் ஆர்.நல்லகண்ணு தலைமையில், கவிப்பேரரசு வைரமுத்து ஆகஸ்ட் 12-ம்...

விருமன் விறுவிறுப்பு கம்மி!   

0
-ராகவ் குமார் .    தமிழ் சினிமாவும் இந்திய சினிமாவும் பல்வேறு மாற்றங்களை சந்தித்து கொண்டிருக்க, நமது முத்தையா மட்டும் குடி பெருமை,செண்டிமெண்ட், சொந்தத்திற்குள் திருமணம் என விருமனில் கதை விட்டு இருக்கிறார்.      தாசில்தாராக இருந்து...

நயன் – விக்கி காதல் : நெட் பிளிக்ஸ் டீஸர் வெளியீடு! 

0
லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாராவும்  இயக்குநர் விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளாக  காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் விமரிசையாக நடந்தது.   சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்...

தேவி ஸ்ரீ பிரசாத்  இசையமைப்பில் ‘ஹர் கர் திரங்கா’ ! 

0
-லதானந்த்.  'ஹர் கர் திரங்கா' என்ற மெய்சிலிர்க்க வைக்கும் தேசபக்திப் பாடல், வெளியிடப்பட்ட  சில மணி நேரங்களிலேயே நாடு முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது.   தேவி ஸ்ரீ பிரசாத், ஆஷா போஸ்லே, சோனு நிகம் மற்றும்...

வேட்டி கட்டி அசத்திய வெளிநாட்டு செஸ் வீரர்! 

0
-காயத்ரி.  மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். உலகம் முழுவதும் இருந்து வந்துள்ள விளையாட்டு வீரர்கள், அவர்களின் நாட்டு கலாச்சாரத்தை பிரபலிக்கும் வகையில் வண்ண...