0,00 INR

No products in the cart.

பல்லாயிரம் பக்கங்கள் எழுதிய ஒருவர் ஆதரிப்பதுதான் தமிழின் அவலம்

? 20,000 புத்தகங்கள் படித்திருப்பதாகச் சொல்லும்  பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, இப்போது ‘ஸ்டாலினின் துபாய் பயணத்தில் 5000 கோடி மர்மம் இருக்கிறது‘ என்கிறாரே?
– துளசி கண்ணன், சென்னை

! 20,000 புத்தகங்கள் விவகாரத்தில் அண்ணாமலையாரின் உளரலைவிட அபத்தமானது  “புத்தகத்தைப்பற்றி பேச்சுகளே இல்லாத சூழலில் புத்தகம் பற்றி யார் என்ன சொன்னாலும் அது நல்லதுதான்” என்ற ஜெயமோகனின் கருத்துதான்.  வாசிப்புப் பழக்கமே இல்லாத ஒருவர் புத்தகங்கள் தொடர்பாக இவ்வளவு அபத்தமான கூற்றை முன் வைப்பதை பல்லாயிரம் பக்கங்கள் எழுதிய ஒருவர் ஆதரிப்பதுதான் தமிழின் அவலம்.

முதலமைச்சரின் பயணம் எந்தவித ஒளிவு மறைவும் இல்லாத வெளிப்படையானது. தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அது மர்மப் பயணம் என்று அடிப்படையில்லாத, ஆதாரமற்ற புகார்களை பொதுவெளியில் பேசி வருவது அருவெறுப்புத் தரும் அநாகரிக அரசியலின் உச்சம். அந்த கட்சித் தலைவரின் இதுபோன்ற மலிவான செயலில் ஈடுபடுவதினால் பா.ஜ.க.விற்கு அரும்பிவரும் செல்வாக்கும் அழிந்துவிடும்.

? அந்தர் பல்டி அடிக்கவும் தனித்திறமை வேண்டும்தானே?
– நெல்லை குரலோன்,  பொட்டல்புதூர்

!ஆறுமுக சாமி ஆணையத்திடம்  பன்னீர் செல்வம் அளித்த பதில்களைப் பார்க்கும்போது தன் சொற்களையும் செயலையும்  மறக்கும், மறைக்கும் திறமையிருந்தாலே போதும்; வேறு தனித்திறமை அவசியம் இல்லை  என்று தோன்றுகிறது.

? ஏ.ஆர்.ரஹ்மானின்  மூப்பில்லா தமிழ்தாயே கேட்டீர்களா?
– கண்ணகி, திண்டுகல்

! கலைஞரின் வரிகளில் பிறந்த  ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற கம்பீரமான பாடலை  வழங்கிய ரஹ்மானா இதைத் தயாரித்தார்?  என்று வியப்பு மேலிட்டது.  பல இசைக்கருவிகளின் ஓசை சங்கமத்தில் பாடலின் வரிகள் கேட்கவே இல்லை. பாவம் கவிஞர் தாமரை. அவரது அழகிய வரிகள் சிதைக்கப்பட்டிருக்கிறது. அதைவிட வெறுப்படையச் செய்வது விளம்பரப்படங்கள் போல  ஒவ்வொரு நிமிடமும் துருத்திக்கொண்டு தலை நீட்டும் ஸ்பான்ஸ்ர்களின்  இலச்சினைகள்.  ரஹ்மான் என்ற யானைக்கும்  அடிகள் சறுக்கும் போலிருக்கிறது.

? 60 கி.மீக்கு ஒரு டோல் கேட்  என்று அறிவித்துவிட்டார்களே?
– சம்பத் குமாரி, புதுக்கோட்டை

! பல ஆண்டுகளுக்கு முன்னரே ‘இரண்டு டோல் கேட்களுக்கிடையில்  குறைந்த பட்சம் 60 கி.மீ.இருக்க வேண்டும்’ என்ற விதி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல நெடுஞ்சாலைகளில் அதை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்கள் இந்த விதிகளை மீறி, குறைவான தொலைவிலேயே டோல்கேட்களை நிறுவி வசூலித்துக்கொண்டிருந்தார்கள். இவை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால்  கொள்ளையைத் தடுக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியவர் தமிழக எம்.பி.
தொல். திருமாவளவன். அதன் விளைவே  இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.  இதன் மூலம் தமிழக நெடுஞ்சாலைகளில்
8 க்கும் மேற்பட்ட டோல் கேட்கள் மூடப்பட்டிருக்கின்றன.

? ஸ்டாலின் மட்டும் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குகிறார்?
– சுகுமாரி மாரியப்பன், ஶ்ரீவில்லிபுத்தூர்

! மிகுந்த கவனத்துடன் அவர் பராமரிக்கும் அவரது உடல் நிலை. கட்டுப்பாடான உணவு பழக்கம்,  யோகா உட்பட தினசரி தொடரும் உடற்பயிற்சிகள், நடை பயிற்சி, நீண்ட சைக்கிள் பயணங்கள். இவற்றை அவர் நீண்ட நாட்களாக செய்து வருவதை அவருடன் பழகும் நண்பர்கள் நன்கு அறிவார்கள்.

? நூலகங்களுக்கு சிற்றிதழ்கள் கூட வாங்கப்போகிறார்களாமே?
– பிரியா சந்தோஷ், சேலம்

! மகிழ்ச்சியான செய்தி. குழுக்கள் அமைத்து அவர்கள் தந்த பரிந்துரைகளின்படி ஆணைகளும் பிறப்பித்துவிட்டார்கள். இன்றைக்கு முன்னணியிலிருக்கும் பல இலக்கியப் படைப்பாளிகள் சிற்றிதழ்களில்தான் தங்கள் பயணத்தைத் தொடங்கியவர்கள்.

? RRR படம் எப்படி?
சந்திரமெளலி, பெங்களூரு

! கனவில்கூடக் காணமுடியாத கனவைக் கண்டுவிட்டாற்போல ஒரு படம். பிரம்மாண்டம் என்பது கோடிகளைக் கொட்டிப் படம் எடுப்பது அல்ல… சின்னஞ்சிறு விஷயத்தைக்கூட நுணுக்கமான சித்தரிப்போடும், விவரிப்புக்கு ஏதுவாகாத புதுமையோடும் அமைப்பதுதான் பிரம்மாண்டம். அதைத்தான் செய்திருக்கிறார் ராஜமெளலி.

படத்தின் கலைநேர்த்தி, கதாபாத்திரங்களாகவே கூடுவிட்டுக் கூடு பாய்ந்த நடிகர்களின் அர்ப்பணிப்பு, இசை, எடிட்டிங் ஆகியவற்றைத் தாண்டி  வசூலில் பாகுபலியின் சாதனையை மிஞ்சிவிடும் என்ற செய்தி மிகப்பெரியளவில் இழப்புகளைச் சந்தித்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு  நம்பிக்கையை தந்திருக்கும் படம்.

? மாயவதி ஜனாதிபதி ஆகப்போகிறாரா?
– ஜமால் உசேன் தூத்துக்குடி

! நம் நாட்டில்  இயங்கும் வாட்ஸ்அப் பல்கலைக்கழகங்கள் செய்யும் சேவைகளில்  இம்மாதிரி செய்திகளை உருவாக்கிப்  பரப்பும் ஒன்று.  உ.பி தேர்தலில்  பா.ஜ.க.விற்கு ஆதரவு தந்த ‘பி‘ டீம் என்று அவரது கட்சி வர்ணிக்கப்பட்டது. இப்போது அவரை குடியரசுத் தலைவராக்குகிறார்கள். அவரே இந்தச் செய்தியை மறுத்திருக்கிறார்.

?  நமது குடும்பக் கலாசாரத்தை இழிவு படுத்தும் தொலைகாட்சித் தொடர்களைத் தடுக்கவே முடியாதா?
– மஹாலட்சுமி,  நாகர்கோவில்

! தனியார் வசமிருக்கும் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளுக்கு தணிக்கையில்லாத நிலையில் இந்த அவலத்தைத் தடுக்க முடியாது. தூர்தர்ஷனில் தொடக்க காலங்களில் இருந்த ‘13  அத்தியாயங்கள் மட்டுமே ஒரு தொடர்’  என்ற நிலை மீண்டும்  எழுந்தால் இதைத் தடுக்கமுடியும் என்று தோன்றுகிறது. நீண்ட தொடர்களில்   கதைகளை அடுத்து எப்படி நகர்த்துவது என்று தெரியாமல்  இழுக்க நேரிடும்போதுதான்  இம்மாதிரி வில்லங்கமான  காட்சிகளை அமைத்துவிடுகிறார்கள்.

?  சசிகலா அ.தி.மு.க. வில் மீண்டும் இணைவாரா?
– ரவி சங்கர், மேல்மருவத்தூர்

! ஒருகிணைந்து செயல்படும் என்று சொல்லப்பட்ட  இரட்டைக்குழல் துப்பாக்கியில் ஒரு குழல் ‘ஆம்’ என்கிறது. மற்ற குழல் ‘இல்லை’என்கிறது.  துப்பாக்கியின் விசை அழுத்தப்பட்டு  குண்டு வெடித்தால்தான் உண்மை நிலை தெரியும்.

? ஸ்மார்ட் சிட்டி  ஊழல்களை விசாரிக்க ஆரம்பித்திருப்பதால் அந்த திட்டம் கைவிடப்படுமா?
– ஜோஷ், அயன்புரம்

! எடுக்கும்போது சிறிது  சிந்தி வீணாகிவிட்டதற்காக எண்ணைக் கிணறுகளை மூடி விடமாடார்கள்.

? காகிதத் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் நாளிதழ்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளதே?
– சி. கார்த்திகேயன், சாத்தூர்

! நாளிதழ்கள் மட்டுமில்லை. காகித தட்டுப்பாட்டால் பள்ளிகளில் இறுதியான்டு பரிட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பது தான் வேதனையான செய்தி.  சரியும் பொருளாதராத்தையும் அதன் விளைவுகளையும் கணிக்க முடியாத அளவுக்கு அந்த நாட்டின் நிர்வாகம் சீர் குலைந்திருக்கிறது.

? பைக் வாங்குவதற்காக சேலத்தை சேர்ந்த இளைஞர் இரண்டுலட்ச ரூபாய்க்கு ஒரு  ரூபாய் நாணயங்களாக  கொண்டு வந்தது பற்றி?
– ஆர்.மாதவராமன் கிருஷ்ணகிரி-635001.

! ஒரு ரூபாய் நாணயங்களுக்கு தட்டுபாடு ஏன் ஏற்பட்டது எனப் புரிகிறது. விளம்பரத்துக்காக  செய்திருக்கும்  அவருக்குத் தெரியாத விஷயம் பெருந்தொகைக்கு இப்படி நாணயங்களாக கொடுக்கப்பட்டால் அதை  வாங்க மறுக்கும் உரிமையும் பெறுபவர்களுக்கு இருக்கிறது என்பது. இந்திய நாணயச் சட்டப்படி ஒரு ரூபாய் நோட்டுகளும், நாணயங்களும்  Legal temder என்றழைக்கப்படும்  அரசால் உறுதி செய்யப்பட்டிருக்கும்  கரன்சி நோட்டுக்களுக்கு இணையானது அல்ல.

 

1 COMMENT

  1. ‘ரஹ்மான் என்ற யானைக்கும் அடிகள் சறுக்கும் போலிருக்கிறது..’ அடடா…எவ்வளவு நாசூக்கான விமர்சனம்.. இந்த இடத்தில் இன்னொனறையும் சுட்டிக் காட்டியே ஆக வேண்டும்…தராசார் என்ற கும்கி யானைக்குத் தான், எந்த நேரத்திலும், எந்த சூழலிலும் சறுக்கவே சறுக்காது போலும்!

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...