0,00 INR

No products in the cart.

இந்த வாரம் இவர்

“பஞ்சாப் மக்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சியை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கின்றனர். இது ஒரு பெரிய பொறுப்பு மற்றும் எல்லா பஞ்சாபி மக்களின் முகத்திலும் பகவந்த் மான் மீண்டும் புன்னகையை வரவழைப்பார் என்று நான் நம்புகிறேன்,”என்று பஞ்சாப் தேர்தல் முடிந்தவுடள் டிவிட் செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

2014ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்ததில் இருந்து கட்சியின் நட்சத்திர பிரசாரகராக பகவந்த் மான் இருந்து வருகிறார். பஞ்சாப் முழுவதிலும் மக்கள் ஆதரவை பெற்றுள்ள அக்கட்சியின் ஒரே தலைவர் இவர்தான். ஆம் ஆத்மி கட்சியின் மிகப்பெரிய பலமாகவும், பலவீனமாகவும் அவர் கருதப்படுகிறார்.

ஒரு ஸ்டான்ட்டப் காமெடியனாக வாழ்க்கையைத் தொடங்கிய பகவந்த் மான் 1994 முதல் 2015 வரை 13 பஞ்சாபி மற்றும் இந்தி படங்களிலும், விளம்பரங்களிலும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து அரசியலில் நுழைந்த இவர் மிகக் குறுகிய காலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவரானார்.

“எனது நகைச்சுவையின் மூலம்  அரசியல்வாதிகளின் ஊழல்களை கிண்டல் செய்து கொண்டிருந்தேன்.  ஆனால் “சேற்றை சுத்தம் செய்ய, சேற்றில் இறங்க வேண்டும்” என்று இப்போது உணர்கிறேன். அதனால்தான் இப்போது தீவிர அரசியலுக்கு வந்துள்ளேன” என்று சொல்லும்  பகவந்த் மானை ஒரு நகைச்சுவை நடிகராகவும் தலைவராகவும் மட்டுமே பெரும்பாலான மக்கள் அறிவார்கள். ஆனால் அவர் மிகவும் அழகாகவும்  ஆழமாக எழுதும்  கவிஞம் கூட.

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

இதில் எழும் இசை எப்படியிருக்கும்?

  இந்த வாரம் இவர்   சந்தூர் என்பது ஜம்மு-காஷ்மீருக்குச் சொந்தமான ஒரு பழங்கால தந்தி வாத்திய  இசைக்கருவி. இது பெர்சியாவில் தோன்றியது. இந்த வகை கருவி மெசொப்பொத்தேமியாவில் (கிமு 1600-911) கண்டுபிடிக்கப்பட்டது என்கிறது வரலாறு.  சந்தூர் செவ்வகமானது பொதுவாக...

கனவில் கண்ட நீலக்குருவியைக் கையில் பிடித்தவர்

இந்த வாரம் இவர்   எப்போதும் கனவில் இருப்பவர் எலான் மஸ்க். கட்டாய இராணுவ சேவையைத் தவிர்க்க தென்னாப்பிரிக்காவில் இருந்து கனடா செல்கிறார். "சின்ன வயதில் என்னை வளர்த்தது புத்தகங்கள். அதன் பிறகுதான் பெற்றோர்கள்"  என்று...

இந்த வாரம் இவர்

0
மகிந்த ராஜபக்சே - ஶ்ரீதர்   1945 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டையில் பிறந்த மகிந்த ராஜபக்சே, ஆரம்ப காலம் தொட்டே அரசியலில் ஆர்வத்துடன் பங்கேற்றார், தந்தையின் தேர்தல் பிரசாரங்களிலும் தீவிரம் காட்டினார். தந்தையின் மறைவுக்கு பின்னர் மகிந்த...

அண்ணாமலையைச் சுற்றி வந்தால் போதும், பல புத்தங்களைப் படித்துவிடலாம்.

கடைசிப் பக்கம் சுஜாதா தேசிகன் மைக்ரோ புத்தகங்கள்   ”நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்றபேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

0
வாசகர் ஜோக்ஸ்                                             ...